செய்திகள்

அரசு பணத்தில் எம்.பி-க்கள் அனைவருக்கும் ₹88,000 மதிப்புள்ள ஐபோனை பரிசாக வழங்கிய கர்நாடக முதல்வர்

காவிரி பிரச்சனை குறித்து அனைத்து எம்.பி-க்களுடனும் கலந்து பேசுவதற்கு முன்னதாக குமாரசுவாமி அரசு அனைத்து எம்.பி.க்களுக்கும் விலை உயர்ந்த பரிசுகளை விநியோகித்திருப்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க M .P ராஜீவ் சந்திரசேகர் அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், முதலமைச்சர் அவர்கள் காவிரி விவகாரத்தை விவாதிப்பதற்காக கூட்டத்தை கூட்டி இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். ஆனால், அதற்கு விலை உயர்ந்த பரிசுகள் எல்லாம் எம்.பி.க்களுக்கு ஏன் அனுப்பிவைக்கப்பட்டன என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இத்தகைய விலை உயர்ந்த பரிசுகளை தான் திரும்ப அனுப்பிவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் சந்திரசேகர் குறிப்பிட்டிருக்கும் பரிசுகள், ₹88,000 மதிப்புள்ள ஒரு ஐபோன் எக்ஸ், மற்றும் Moochies எனப்படும் தோல் பை.

பொருளாதார நெருக்கடியால் உழைப்பவர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறிக்கொள்ளும் கர்நாடக அரசாங்கம், இது போன்ற விலையுயர்ந்த பரிசுகளில் பணத்தை செலவிடுவதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை அனுப்புவதற்கான நோக்கமும், வரி செலுத்துவோர் பணத்தை இத்தகைய ஆடம்பரத்திற்காக ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

Tags
Show More
Back to top button
Close
Close