செய்திகள்தமிழ் நாடு

தமிழகத்தில் பத்தாயிரம் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் : தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியில் சுப்ரமணியன் ஸ்வாமி பகீர்

தந்தி டி.வி.யின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில், சுப்ரமணியன் ஸ்வாமி பங்கு பெற்றுள்ளார். நிகழ்ச்சியில், தந்தி டி.வி.யின் தலைமை செய்தி ஆசிரியர், திரு. ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு, தமிழகத்தில் 10 ஆயிரம் தீவிரவாதிகள் உள்ளனர் என்று திடுக்கிடும் தகவலை தெரிவித்துளார்.

தீவிரவாத மனப்பான்மையுடன் இருப்பவர்கள் இருக்கிறார்களா, இல்லை தீவிரவாதிகளே இருக்கிறார்களா என்று ரங்கராஜ் பாண்டே கேட்டதற்கு, “துப்பாக்கி வைத்துக் கொண்டு கொலை செய்வது, பிரவுன் சுகர் விற்பது போன்ற செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகள் பத்தாயிரம் பேர் உள்ளனர்”, என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தீவிரவாதிகளே இல்லை என்று தமிழக முதல்வர் கூறியதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த ஆணித்தரமான கருத்து, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close