நியூஸ் 18 கேரளா தொலைக்காட்சி பரப்பிய போலி செய்தியால், மதக் கலவரம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. Popular Front of India (PFI) என்னும் அமைப்பைச் சேர்ந்த மத அடிப்படை வாதிகள், தங்கள் முகங்களையும், வண்டிகளின் நம்பர் பிளேட்டயும் மறைத்துக்கொண்டு சென்று, இந்திய ராணுவத்தில் பணி புரியும் விஷ்ணு என்பவரின் வீட்டை சூறையாடி உள்ளனர். விஷ்ணு மற்றும் அவரது தந்தை சசிதரன் வீட்டில் இல்லாத போது, அவர்களின் வீடு புகுந்து, தாயார் சுபத்ரா-வை கீழே தள்ளி துன்புறுத்தி உள்ளனர்.  மேலும், பூஜை அறையை தாக்கி, சுவாமி படங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்தது ஒரு சிறிய சம்பவம் தான். கொல்லம் மாவட்டம், கொட்டரகரா சாலையில், கால் நடை வியாபாரி ஒருவர் கால் நடைகளை வண்டியில் கொண்டு சென்றிருக்கிறார். கால் நடைகளை மூடாமலும், அவைகள் கீழே விழும் நிலையிலும் இருந்திருக்கின்றன. இதனை அந்த வண்டியின் ஓட்டுனரான  சிராஜூதினிடம் விஷ்ணுவும் அவரது நண்பர் கோகுலும் கேட்ட போது, சிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.

Advertisement

இந்த செய்தியை, முற்றிலுமாக திரித்து, நியூஸ் 18 தொலைக்காட்சி, செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், “ஒரு “இஸ்லாமிய” கால் நடை வியாபாரியை, “ஆர்.எஸ்.எஸ்” இயக்கத்தை சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர்”, என்று முற்றிலுமாக திரித்து, மத கலவரத்தை தூண்டும் வகையில் செய்தியை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து PFI இயக்கத்தை சேர்ந்த மத அடிப்படை வாதிகள், ராணுவ வீரரான விஷ்ணுவின் வீட்டை தாக்கியுள்ளனர்.

டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக, மக்களின் உணர்வைத் தூண்டும் வகையில் செய்தி வெளியிடும் முன்னணி செய்தி நிறுவனங்கள், தாங்கள் வெளியிடும் போலி செய்தியால், மதக் கலவரம் உருவாகும் என்ற எண்ணம் கூட இல்லாமல் செய்தி வெளியிடுவது எந்த வகையில் நாட்டில் அமைதியை உண்டாக்கும் என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.

Picture Courtesy and Inputs :  Organiser
Share