சிறப்பு கட்டுரைகள்

GST – கடந்து வந்த பாதை ! வெற்றியா ? தோல்வியா ? – ஓர் அலசல்

உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டில்.. ஒரே ஆண்டில் GST அடைந்த மைல்கல்..!

இந்தியப் பொருளாதாரம் பற்றி மாதச் சம்பளம் வாங்கும் சாமானிய இந்தியர்களையும், வயிற்றுப் பசி இருந்தும் வரி பற்றிப் பேசும் இந்தியர்களையும் உருவாக்கி இருக்கும் விவாதப் பொருளாக உருவெடுத்திருக்கிறது GST என்றழைக்கப்படும் பொருள்கள் மற்றும் சேவைகள் வரி. சரி அப்படி இந்த GST யில் என்ன புதிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது எனப் பார்ப்போம்.

GST என்றால் என்ன?

இந்தியாவில் 2000ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் அவர்களால தான் ஜிஎஸ்டி பற்றிய முதல் விவாதம் துவக்கிவைக்கப்பட்டது. GST  என்பது, மறைமுக வரி விதிப்பைச் சீர்படுத்தி,  16 மறைமுக வரியினை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையை அமல்படுத்துவதாகும். இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் எளிமையாகும். அனைத்து மறைமுக வரியையும் ஒரே வரியாக்க கொண்டுவரப்பட்டதே இந்த GST

GST பயணம்: தோல்வி கண்ட GST UPA மாதிரி

 ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) ஆட்சியின்போது GST  யோசனையை சில மாநில முதலமைச்சர்கள் ஏற்கவில்லை. GST  தேவை என ஒவ்வொருவரும் விரும்பியபோதிலும், UPA-வின் GST  மாதிரியை ஒரு மாநிலம் கூட விரும்பவில்லை. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

முதலாவது தோல்வி:

முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உள்ளிட்ட மாநிலங்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. ஒற்றை வரி முறையை நோக்கிய நகர்வில் CST என்னும் மத்திய விற்பனை வரியை நீக்குமாறு UPA மாநிலங்களைக் கேட்டுக் கொண்டது. சில குறிப்பிட்ட காலத்திற்கு CST பதிலாக இழப்பீடு அளிக்கப்படும் என மாநிலங்களுக்கு அது உறுதிமொழி அளித்தது. இதனை ஏற்று மாநிலங்கள் CSTயை நீக்கிவிட அதற்கு இழப்பீடாக மத்திய அரசு மாநிலங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்பட்டது. CST இழப்பீட்டை மாநிலங்கள் கோரிய போது, மத்திய அரசு வேறு மாதிரி நடந்து கொண்டது.

இரண்டாவது தோல்வி:

GST வரி முறைக்கு மாறும்போது மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என மாநிலங்களுக்கு இருந்த கவலை, GSTயை கொண்டு வரும் முயற்சியில் UPAவின் தோல்விக்கு இரண்டாவது காரணமாகும்.

இழப்பை சந்திக்கும் மாநிலங்களுக்கு இழப்பீடு அளிப்பதற்கான யோசனை எதுவும் UPA கொண்டு வந்த அரசியல் சட்ட திருத்தத்தில் இடம்பெறவில்லை.

தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற உற்பத்தி செய்யும் மாநிலங்கள் பெரும் கவலை கொண்டன. இழப்பீடு இல்லாவிடில் GST இல்லை என அவை கொடி பிடித்தன.

CST இழப்பீட்டை அளித்த வலிமையுடன் பேச்சுவார்த்தைக்கு அவர்களை அழைத்த அருண்ஜெட்லி,  GST கவுன்சிலில் ஆலோசனை நடத்திய பின்னர், வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 14 சதவீத கூடுதல் வருவாய் அளிக்க மாநிலங்களிடம் ஒப்புக் கொண்டார்.

மேலும் காங்கிரஸ் கூறிய மாநிலங்களுக்கு 40 % மைய அரசுக்கு 60 % என்று இருந்த பங்கீடு, மாநிலங்களுக்கு 60 % மைய அரசுக்கு 40 %  என மாற்றியமைக்கப்பட்டது. இதைக் கேட்டு மாநிலங்கள் மகிழ்ச்சி அடைய, GSTயைக் கொண்டு வருவதில் மாநிலங்களின் நம்பிக்கையைப் பெறுவதில் வெற்றி பெற்றது.

GST எவ்வாறு செயல்படுகிறது..?

ஒரு தேசிய வரி சீர்திருத்தம் நிச்சயமாக கடுமையான வழிமுறைகள் மற்றும் ஏற்பாடுகள் ஆகியவைகளைக் கொண்டிருக்க வேண்டும். எனவே, GST ஆட்சிக்குழு ஒரு பிழையேற்படுத்தாத செயல்பாட்டின் மூலமாக இந்த புதிய வரி முறையினை செயல்படுத்த உள்ளது. அதற்காக இந்த குழு GSTயை மூன்று வகைகளாக பிரித்துள்ளது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி (CGST): இந்த வருவாய் முழுவதும் மத்திய அரசின் மூலம் வசூலிக்கப்படும்.

மாநில அரசின் ஜிஎஸ்டி (SGST) : இந்த வருவாய் முழுவதும் மாநில அரசுகளால் வசூலிக்கப்படும்.

மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி (IGST) : மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் விற்பனையின் மூலம் வரும் வருவாய் மத்திய அரசால் வசூலிக்கப்படும்.

GST-யின் 5 வரி வரம்புகள் :

ஒவ்வொரு பொருள் மற்றும் சேவைக்கும் இவ்வளவுதான் வரி வசூலிக்க வேண்டும் என GST கவுன்சில் அறிவுறுத்தி இருக்கிறது. 0%, 5%, 12%, 18%, 28%  5 வரி வரம்புகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

ஜி.எஸ்.டி தாக்கம்:

2017 ஜூலை முதல் 2018 மார்ச் வரை முதல்  9 மாதங்களிலேயே ரூ. 8.2 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது  வருடாந்திர கணக்கில் ரூ. 11 லட்சம் கோடி. இதன் மூலமாக 11 சதவீத வளர்ச்சி கிடைக்கும். சராசரியாக 80000 கோடி மாதம் வசூலாகிறது.

நுகர்வோருக்கான வரி குறைக்கப்பட்ட போதிலும் வரலாற்று ரீதியான வளர்ச்சியை இது கண்டுள்ளது.

இன்னும் வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது, வரி வசூல் மேலும் அதிகரிக்கும்.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கு கூடுதலாக 1.5% அதிகரிக்க செய்யும்.

IGST படிப்படியாக விலக்கப்படும்போது,  இழப்பீட்டு தீர்வை இன்றியும் பெரும்பாலான மாநிலங்கள் 14% வளர்ச்சி இலக்கை விஞ்சும்.

கட்டுமானம்:

கட்­டு­மானம் உள்­ளிட்ட உள்­கட்­ட­மைப்பில் சிமென்ட் முக்­கிய அம்­ச­மாக இருக்­கி­றது. GST இதன் மீது சாத­க­மான  தாக்­கத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் சிமென்ட் மீதான மறை­முக வரி 25% வரை இருந்தது. GSTயில் இது ஒரே வரியாக 28 % கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் படிப்படியாக விலை குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

சரக்கு போக்­கு­வ­ரத்து

GSTயால்  லாரிகள் சுங்கச் சாவடிகளில் நிற்கத் தேவையில்லை என்பதால், சரக்கு போக்குவரத்து நேரம், பாதியாகக் குறைந்துள்ளது. இதனால், நிறுவனங்களுக்கு சரக்கு போக்குவரத்து செலவினம், 40 சதவீதம் வரை குறையும் என, உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது. இவற்றின் பலனாக செல­வுகள் 20 முதல் 30 சத­வீதம் குறைந்துள்ளது.

பொறி­யியல் நிர்­வாகம்:

ஆலோ­சனை, பொறி­யியல் நிர்­வாகம் மற்றும் திட்ட மேலாண்மை சேவை­களில் இந்த சேவை­களை வழங்கி வரும் நிறுவனங்கள் 18 % GST மட்டுமே செலுத்துகின்றன. இடைத்தரகர் முறையில் வீணான செலவுகள் இதமூலமாக தடுக்கப்பட்டுள்ளன.

ஆயத்த ஆடை உற்பத்தி:

GST மூலமாக ஆடம்பரமற்ற ஆடைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் பலனடைந்துள்ளன. 1000 ரூபாய் வரையிலான ஆடைகளுக்கு வரி இல்லை. 1000 ரூபாய்க்கு அதிகமான ஆடம்பர ஆடைகளுக்கு மட்டுமே  18 % சதவிகித GST வரி விதிக்கப்பட்டு வருகிறது.

தினசரி நுகர்வு பொருட்கள்:

மக்கள் அதிக அளவில் நுகரக்கூடிய அன்றாட பயன்பாட்டு பொருட்களுக்கு 18-20% கீழ் வரிவிதிக்கப்படுவதால் அவற்றின் விலை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. பற்பசை முதற்கொண்டு விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேளிக்கை துறை:

பொழுதுபோக்கில் முக்கிய பங்கு வகிக்கும் இதற்கு 18% -28% வரை வரி விதிக்கப்படுகிறது. இவை மாநில அரசின் முடிவை பொறுத்து வேறுபடும்.

தொலைதொடர்பு:

தொலைதொடர்பு துறையில் 18 % GST  வரி விதிக்கப்படுகிறது. இதனால் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் மீது செலுத்தும் அழுத்தம் குறைந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர் சேவையினை பன்மடங்கு மேம்படுத்தியுள்ளன.

பொருளாதார ரீதியாக:

GST வரி அமலுக்குப் பின்பு நாட்டின் வரி விதிப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரி விதிப்பில் வெளிப்படை தன்மைக்கு வழி வகுத்துள்ளது. தொழில் தொடங்குவதற்கு எளிதான சூழல் நிலவும் நாடுகள் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா முதல் 100 இடங்களுக்குள் உள்ளது. மூன்று ஆண்டுகளில் மட்டும் 42 இடங்கள் முன்னேறியிருக்கிறோம்.

தமிழகத்தில் GST:

GST அமலாக்கத்திற்கு பிறகு தமிழக அரசின் வரி வசூல் 12 புள்ளி 3 சதகிதம் அதிகரித்துள்ளது. 34 லட்சம் புதிய நிறுவனங்கள் GST பதிவு எண்களை பெற்றதால், வரி கட்டும் நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவிகிதம் அதிகரித்து தமிழகத்தில் GST மிக நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close