கடந்த ஞாயிறு அன்று, தி டைம்ஸ் பத்திரிக்கை, செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமனுக்கு நேரம் கொடுக்காமல், இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு துறை செயலாளர், சந்திக்க மறுத்துவிட்டார் என அடிப்படை ஆதாரமற்ற போலி செய்தியை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள, பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள், இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது என தெரிவித்து விட்டு, இரு தரப்பினருக்கும் இடையே பொருத்தமாக இருக்கும் தேதியில் சந்திப்பு நடைபெறும் என்று தெரிவித்தார்.

 

 

இதனை உறுதி செய்யும் வகையில், இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு துறை செயலாளர், கேவின் வில்லியம்சன் அவர்களும் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே பொருத்தமாக இருக்கும் தேதியில் சந்திப்பை எதிர் நோக்குவதாக தெரிவித்துள்ளார்.

 

ஆக, இரு தரப்பிலிருந்தும் வந்த பதிவுகளை அடுத்து, இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்று வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது போன்ற போலி செய்திகளை வெளியிடும் ஊடகங்களை, மத்திய அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் அடையாளம் காட்டுவது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது

Share