சிறப்பு கட்டுரைகள்

தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதில் சிறந்தவர்கள் யார் ஐக்கிய முற்போக்கு கூட்டணியா அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியா?

செப்டம்பர் 15, 2008 மாலை வேளை, டெல்லி மாநகரம் தொடர் குண்டு வெடிப்பை எதிர்கொண்டது. அதனை தொடர்ந்து அப்போதைய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பட்டீல், பாதிக்கபட்டவர்களின் வலியை குறைக்கும் நோக்கிலும், அவர்களுக்கு ஆதரவு வழங்கி உறுதுணையாக தோள் கொடுக்கவும் சம்பவ இடத்திற்க்கு விரைந்தார். ஆனால் அவர் வருகையின் போது அவரிடம் இருந்த விசித்திரமான சில நடத்தைகளும், உணர்வற்ற தன்மையும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்ற சமயத்தில் அதாவது மாலை 6.30 மணிமுதல் 8.30 மணிக்குள்ளான இந்த இரண்டு மணி நேரத்தில் திரு. பாட்டீல் மருத்துவமனைகளையும், குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களையும் பார்வையிட்டார் ஆனால் மிக விநோதமாக இந்த இரண்டு மணி நேரங்களுக்குள்ளாக மூன்று சட்டைகளை மாற்றிவிட்டார்.

திரு.பாட்டீல் நீண்ட கால காங்கிரஸார்!! காந்தி குடும்பத்தின் விசுவாசி ஆனால் முரண்பாடாக இந்த கட்சி பயங்காரவாத சம்பவங்களை அணுகியிருக்கும் விதத்தில் சிறிதும் பச்சாதாபம் இல்லை, புறகணிப்பின் விளிம்பில் இருந்தார்கள். இந்த சம்பவம் நடந்த சில மாதங்களுக்கு பின் 26/11 சம்பவம் நிகழ்ந்தது. இதனை தொடர்ந்து திரு. பட்டீல் பதவி விலகினார். ஆனால் பயங்கரவாதத்தின் மீதான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அணுகுமுறை பலவீனமாக இருந்தது என்ற கருத்து மட்டும் நிரந்தரமாக தங்கிவிட்டது.

2014 இல் பயங்கரவாதம் சூழல் குறித்து பலத்த குரலுடன் அரற்றி வந்தமையால் தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து “பயங்கரவாதத்தை தடுப்பதில் நீங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை விட சிறப்பாக செயலாற்றிவிட்டீர்களா?” என கேட்க இது சரியான தருணம். காலப்போக்கை பார்கிற போது இந்த வழக்கு இப்போது முக்கியமானதாகவும் நிதர்சனமானதாகவும் கருதப்படுகிறது.

சில எளிமையான புள்ளியியல் தரவுகள் உங்களுக்காக:

இந்த இரண்டு ஆட்சியின் போதும், அதிக மக்கள் தொகை கொண்ட 8 இந்திய நகரங்களில்(டெல்லி, மும்பை, கொல்கத்தா,பெங்களூரு,சென்னை, ஹைதராபாத்,அஹமதாபாத்,பூனே) நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை

பத்தாண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடந்த மொத்த தாக்குதல்களின் எண்ணிக்கை 18. கடந்த நான்கு ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் நிகழ்ந்த தாக்குதலின் எண்ணிக்கை 1.

இதற்கிடையே இந்தியன் மெட்ரோவில் நிகழ்ந்த சம்பவம் முக்கியத்துவத்தை பெற்றாலும், அதை ஒன்றை மட்டுமே வைத்து கொண்டு நாட்டின் ஏனைய பகுதிகளையும் மதிப்பீடு செய்ய முடியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொல்லப்பட்ட பொதுமக்களின் சராசரி எண்ணிக்கை ஓர் ஆண்டிற்க்கு 757. ஆனால் அதுவே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 241. ஒரு வருடத்திற்கு கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கையில் 516 வீதம் வித்தியாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது

இந்த தரவுகளை மேம்போக்கான பார்வையோடு பார்த்தால் இரண்டு சுவாரஸ்யமான தகவல்கள் கிட்டும். முதலாவது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2009 ஆம் ஆண்டு காலத்தில் இந்த விஷயத்தில் ஓர் விழ்ச்சியிருந்தது, இந்த வருடம் தான் உள்துறை அமைச்சராக திரு. பாட்டீல் பதவி விலகி திரு. ப. சிதம்பரம் அமைச்சராக பதவியேற்றார். இரண்டாவது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை 2005 முதல் 2010 க்குள் தான் அதிகமாக இருந்தது. மற்றொருபுறம் தீவிரவாதிகள் கொல்லப்படுவது மற்றும் பாதுகாப்பு படையினரின் உயிர்தியாகம் ஆகியவைகளின் விகிதம் சராசரியாக UPA ஆட்சியில் 2.77 ஆகவும் NDA ஆட்சியில்2.58 ஆகவும் இருந்தது. “தீவிரவாதிகளுக்கும் – பாதுகாப்பு படையினருக்கும்” இடையேயான விகிதத்தில் எந்த பெரிய வித்தியாசமும் இந்த இரண்டு ஆட்சிகளிலும் இல்லை என இதன் மூலம் நமக்கு புலப்படுகிறது.

ஆனால் தீவிரவாதிகள் கொல்லப்படுவதற்கும் – பொதுமக்கள் கொல்லப்படுவதற்குமான விகிதம் UPA ஆட்சியில் 1.25 ஆகவும் NDA வில் 2.01 ஆகவும் உள்ளது. இதன் மூலம் நாம் எண்ணிக்கை ரீதியாக பார்த்தாலும் சரி, அல்லது விகித முறைப்படி பார்த்தாலும் சரி நமக்கு கிடைக்கும் முடிவுகள் NDA அரசு UPA அரசை விட விஞ்சியுள்ளது என்பதே!!

இதே போக்கை நாம், ஒரு பொதுமக்களுக்கு நிகராக கொல்லப்படும் தீவிரவாதிகளின் எண்ணிக்கையை இரண்டு அரசிலும் கணக்கில் கொண்டால். அந்த முடிவில் UPA விற்க்கு கிட்டதட்ட 1.1 ஆகவும் NDA அரசில் கிட்டதட்ட 2.2 ஆகவும் உள்ளது.

இந்த அனைத்திந்திய கதைகள், ஏராளமான காரணங்களை முன்னிறுத்தி தவறாக வழிநடத்துவதாக ஒருவர் வாதிடக்கூடும். நாடு முழுவதும் பரவியுள்ள இடது சாரி தீவிரவாத குழுக்களால் பாதிக்கப்பட்டவர்களும் மேலுள்ள தரவினுள் அடங்குவர் என்பதை அவரகள் புரிந்துகொள்ள வேண்டும். அதே வேளையில் நடைபெற்ற இடது சாரிகளில் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்த தரவுகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

இரண்டு அரசின் கீழும் நடைபெற்ற இடது சாரி தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து இப்போது காணலாம். முதலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சிவப்பு பயங்கரவாதத்தால் ஆண்டொன்றிற்க்கு கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 289, இது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 114 ஆக இருந்தது. இந்த விகிதம் ஏன் UPA ஆட்சியில் அதிகமாக உள்ளதெனில் 2010 ஆம் ஆண்டில் 626 பொதுமக்கள் இடது சாரி தீவிரவாதிகளால் சிதைக்கப்பட்டனர். இடது சாரி தீவிரவாதிகள் கொல்லப்பட்டதும் அதற்கு நிகராக பொதுமக்கள் கொல்லப்பட் விகிதமும் NDA ஆட்சியில்1.47 ஆகவும் UPA ஆட்சியில் 0.86 ஆகவும் உள்ளது. கீழே உள்ள வரைபடம் இது குறித்த தெளிவான போக்கை நமக்கு காண்பிக்கிறது இது ப.சிதம்பரம் அவர்களின் ஆட்சியின் போது நமக்கு கிடைத்தது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற சில மோதல் நிறைந்த மாநிலங்களாலோ அல்லது வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள சில மாநிலங்களாலோ இந்த வேறுபாடு தோன்றக்கூடும். நாம் இந்த ஜம்மு & காஷ்மீரத்தையோ, வடகிழக்கு பகுதிகளையோ அல்லது இடது சாரி தீவிரவாதத்தையோ விலக்கி பார்த்தால் நம் நாட்டின் செயல்பாடு எந்த மாதிரியானதாக இருக்கும்? (இதன் மூலம் நான் இந்த மாநிலங்களை குறைத்து மதிப்பிடவில்லை… இப்படி பார்பதன் மூலம் மோதல்கள் அற்ற மாநிலங்களின் மீது கவனம் செலுத்த விரும்புகிறேன்)

இந்த தரவுகளை பார்க்கிற போது, ஒரு ஆண்டுக்கு சராசரியாக கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை NDA ஆட்சியில் நான்காகவும், UPA ஆட்சியில் 101 இருந்துள்ளது.

NDA கட்சியின் ஆதரவாளர்கள் இந்த எண்ணிக்கையை வைத்து கொண்டு தங்கள் கட்சியின் சிறப்பான செயல்பாடுகளை சொல்லி மார்புயர்த்தி நடப்பார்கள். அதே வேளையில், UPA ஆதரவாளர்கள் இரண்டு கேள்விகளை கேட்ககூடும்

1. ஒரு வேளை ஆட்சி மாற்றம் நிகழும் போது தீவிரவாதிகளின் மனவோட்டமும் மாறியிருக்குமோ?
2. UPA ஆட்சியின் ஆரம்பகாலத்தில் பாதுகாப்பு மற்றும் உளவுப்படை தீவிரவாதிகளின் புதிய முறைகளால் பீடிக்கப்பட்டிருந்து அதை எதிர்த்து போராடுவதற்கான புதிய முறைகளை வளர்த்து கொண்ட சமயத்தில் NDA அரசு பயனடைந்திருக்கலாம்

முதல் கேள்வி நியாயமானதாகவே இருக்கிறது, இது நிகழ்வுகளை தெளிவுப்படுத்துவதை குழப்பமடையச்செய்யும் கேள்வியாகவே எனக்கு படுகிறது. இரண்டாம் கேள்விக்கு மிகுந்த கண்காணிப்பு தேவைப்படுகிறது. NDA அரசு ஏற்படுத்தியிருக்கும் எண்ணிக்கை மாற்றம் என்பது தீவிரவாதத்திற்கு எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த செழுமையான அறிவு இருந்ததால் மட்டுமே நிகழ்ந்தது அல்ல.

எனவே, NDA அரசு UPA அரசை விட மிகச்சிறப்பாக பாதுகாத்துள்ளது என்பது தெளிவாகிறது. நான் தீவிரவாதத்தினை ஆய்வு செய்யும் அளவு நிபுணன் அல்ல என்றபோதும், திரு. அஜிட் டாவல் அவர்களின் சொந்த அனுபவம் தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதில் பெரும் பங்கு வகித்திருப்பதாகவே கருதுகிறேன்.ஓர் மெட்ரோ நகரத்தில், ஒரெ வருடத்தில் தொடர்ந்து இரண்டு குண்டு வெடிப்பினை சந்தித்த நாம் தற்போது குண்டுவெடிப்பே இல்லை என்ற இடத்திற்கு வந்திருக்கிறோம்.

இது மிக வலிமையா தடுப்பு கொள்கைகள், சிறந்த புலானாய்வு சேகரிப்புகள் மற்றும் வலுவான அரசியல் களம் ஆகியவற்றால் அச்சுருத்துலூட்டக்கூடிய தீவிரவதியான புர்ஹான் வானியை அகற்றமுடிந்துள்ளது. மேலும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் கணக்குகளின் படி தீவிரவாதித்திற்கு எதிரான போக்கை கடைப்பிடிப்பவர்களுடன் கூட்டணி என்பதாக இருக்கலாம். நிச்சயமாக, இவை அனைத்தும் யூகங்களே மேலும் பகுப்பாய்வுகள் செய்வதன் மூலம் உறுதியான முடிவினை நாம் எட்ட முடியும்.

Inputs from Swarajya Magazine

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close