நேரடி அந்நிய முதலீடு முன்பு எப்போதும் இல்லாத அளவில் குறைந்துள்ளதாக பல ஊடகங்களில் நம்பகத்தன்மையாற்ற தரவுகள் மூலமாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. உண்மையில் பங்கு சந்தையில் நிகழ்வதை போல ஏற்படும் ஏற்ற இறக்கத்தையே சரிவு என்று கூறி தகவல் வெளியிட்டது தற்போது தெரிய வந்துள்ளது.

நேரடி அந்நிய முதலீடு (FDI), பொருளாதார வளர்ச்சியில் முக்கிய காரணியாக இருக்கிறது. நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு கடன் அல்லாத நிதி ஆதாரமாக இது இருக்கிறது. 

முதலீட்டாளர்களுக்கு உகந்த நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையை அரசு உருவாக்கியுள்ளதுஇதன்கீழ் பெரும்பாலான துறைகள் / செயல்பாடுகளில் ஆட்டோமேடிக் முறையின் கீழ் 100% வரையில் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப் படுகிறது. பாதுகாப்பு, கட்டுமான மேம்பாடு, காப்பீடு, ஓய்வூதியம், இதர நிதிச் சேவைகள், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள், ஒலிபரப்பு, சிவில் விமானப் போக்குவரத்து, மருந்து துறை, டிரேடிங் உள்ளிட்ட பல துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையில் அண்மையில் அரசு சீர்திருத்தங்கள் செய்தது.

அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, நாட்டுக்கு வந்த நேரடி அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் வந்த மொத்த நேரடி அந்நிய முதலீடு 45.15 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 2013 – 14-ல் இது 36.05 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2015-16ல் கிடைத்த மொத்த நேரடி அந்நிய முதலீடு 55.46 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 2016-17 நிதி ஆண்டில் இது 60.08 பில்லியன் அமெரிக்க டாலர்களாக, முன் எப்போதையும்விட அதிக அளவாக வந்திருக்கிறது.

நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையை மேலும் தாராளமாக்குவது மற்றும் எளிமையாக்குவதன் மூலம், இன்னும் அதிகமான அந்நிய முதலீட்டைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக உணரப்பட்டது. அதற்கேற்ப நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையில் பல திருத்தங்களைச் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இதனை அப்படியே திரித்து நேரடி அந்நிய முதலீடு சரிந்ததை போன்றதொரு தோற்றத்தை சில விஷம ஊடங்கங்கள் ஏற்படுத்தியுள்ளன.

முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கும் அந்நிய நேரடி முதலீட்டை, இறங்குமுகமாக செல்வதை போன்று சித்தரித்து கட்டியுள்ளனர். மேலே உள்ள படத்தை பார்த்தாலே உண்மை நிலவரம் தெரிய வரும்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் சரித்திரத்திலேயே இல்லாத வகையில் 8579 மில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளது.

கடந்த நிதி ஆண்டில் அதிகளவில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்த்த துறைகள்

சேவை துறை : 6.7 பில்லியன் டாலர்

கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை : 6.15 பில்லியன் டாலர்

தொலைத்தொடர்பு தூறை : 6.21 பில்லியன் டாலர்

டிரேடிங் : 4.34 பில்லியன் டாலர்

கட்டுமானம் : 2.73 பில்லியன் டாலர்

ஆட்டோமொபைல்: 2 பில்லியன் டாலர்

மின்சாரம் : 1.62 பில்லியன் டாலர்

இவ்வாறு ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கும் முதலீடுகளை, குறுகிய கால தரவுடன் ஒப்பிட்டு போலியான தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது போன்ற செய்திகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்பதற்காகவே பேஸ்புக் நிறுவனம் போலி செய்திகளை கண்டறியும் பிரிவை சோதனை அடிப்படையில் கனடாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கும் இது வரும்பட்சத்தில் இப்படி செய்திவெளியிடும் பல ஊடக நிறுவனங்கள் அடிபடலாம் என்று கூறப்படுகிறது.

Share