தமிழ் நாடு

சென்னை – சேலம் பசுமைவழி சாலை திட்டம் குறித்து வாட்ஸாப் மூலம் வதந்தி பரப்பிய மூவர் கைது

சென்னை சேலம் பசுமைவழி சாலை திட்டத்தை பற்றி பலர் வேண்டுமென்றே பொய் தகவல்களையும், மக்களை வன்முறையில் தூண்டிவிடும் தகவல்களையும் பரப்பி வருகின்றனர். இவ்வாறு செய்து தான், பல சமூக விரோத சக்திகள் தூத்துக்குடியில் வன்முறையை உண்டாக்கினார்கள், இதனால், இவ்வாறு மீண்டும் நிகழக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக உள்ளது. இதனால் நடிகர் மன்சூர் அலிகான், பியூஸ் மனுஷ், வளர்மதி ஆகியோர் வன்முறை தூண்டும் விதத்தில் பேசியதற்காகவும், பொய் தகவல்களை பரப்பியதற்காகவும் கைது செய்யப்பட்டனர். இப்பொழுது, சமீபத்தில் வாட்ஸாப் மூலம் இந்த திட்டத்தின் பற்றி பொய் தகவல்களை பரப்பிய சிலரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரளாவில் யானை மிதித்து உயிரிழந்தவரின் வீடியோவை பசுமை வழிச்சாலையை எதிர்த்தவரை காவல்துறை கொன்றதாக பொய்யாக சமீபத்தில் வாட்சப்பில் பரப்பிய ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. இதைத்தவிர, திருவண்ணாமலை காந்தி சிலை அருகே போராட்டத்தை தூண்டி விட வாட்ஸாப் மூலம் புகைப்படங்களை பரப்பிய மூன்று நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திக்கொண்டு வருகின்றனர்.

₹10 ஆயிரம் கோடி செலவில் உருவாகிவரும் சென்னை சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்தைப்பற்றி பொய் தகவல்கள் பரவி வரும் இந்த சமயத்தில் இதனை பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலை பள்ளியில் பேசியுள்ளார். இந்த பேச்சில் அவர் நாடு முன்னேற மக்களுக்கு சாலை திட்டங்கள் அவசியம் என்றும் இதனை வேண்டுமென்றே சிலர் பெரிய பிரச்னையாக மக்களிடம் எடுத்து செல்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். இந்த சாலையால் சென்னைக்கும் சேலத்திற்கும் 60 கிலோ மீட்டர் குறைவதால் சரக்கு போக்குவரத்து கட்டணமும், பொருட்களின் விலையும் குறையும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Pic Credits – Business Today

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close