மார்ச் 18 அன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் அவருடைய மனைவி சவிதா அவர்களும் ஒடிசா மாநிலம் பூரியிலுள்ள ஶ்ரீ ஜெகநாதர் ஆலயத்திற்க்கு சென்றிருந்தனர். அதன் பின் ஊடகங்களில் விரைவாக பரவிய செய்தி ஶ்ரீ ஜெகநாதர் கோவில் நிர்வாகத்தின் உறுப்பினர்கள் ஓர் சந்திப்பை நிகழ்த்தியதாகவும், அதில் ஜனாதிபதியையும் அவரின் மனைவியையும் தவறாக நடத்தியது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது. அங்கே ஜனாதிபதியின் பாதுகாப்பு வளையம் தகர்க்கப்பட்டதற்கான சாத்தியங்கள் இருந்திருக்கலாம்.  திருமதி.சவிதா கோவிந்த் அவரின் பிரார்த்தனைகளை கோவில் கருவறையில் செலுத்தி கொண்டிருந்த போது அர்ச்சகர்கள் சுற்றி வளைத்துவிட்டதாகவும், அதனை தொடர்ந்து அங்கே நெருக்கடியான சூழல் உருவானதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து ஜனாதிபதி மாளிகையிலிருந்து நடைபெற்றதாக சொல்லப்படும் தொந்தரவுகள் குறித்து எந்தவொரு கடிதமோ அல்லது குறிப்போ இதுநாள் வரை வெளியிடப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். பூரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அகர்வால் அவர்களின் தலைமையில் ஶ்ரீ ஜெகநாதர் கோவில் நிர்வாக உறுப்பினர்கள் இது குறித்து விவாதித்துள்ளனர். அதனை தொடர்ந்து கலெக்டர் அது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

உண்மையை சொன்னால், ஜனாதிபதி மாளிகை இதை குறித்த மறுப்பை தெரிவித்த பின், ஜனாதிபதி மற்றும் அவர் மனைவியிடமும் அர்ச்சகர்கள் தவறாக நடந்து கொண்டதாக பொய்யாக குற்றம் சாட்டிய பூரி கலெக்டர் மீதும், ஶ்ரீ ஜெகநாதர் கோவில் நிர்வாக தலைவர் மீதும் அர்ச்சகர்கள் சங்கம் முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிந்துள்ளது.

போலியான செய்திகளை பரப்பும் பத்திரிக்கையாளர்களுக்கும், போராளிகளுக்கும் மற்றும் டெல்லியின் அதிகார வர்கம் எனக்கூறப்படும் லூட்டின்ஸ் படையினருக்கும் இது ஒரு பிராச்சார யுத்தி அன்றி வேறொன்றுமில்லை. இப்படியோர் சிறு பொறி தென்பட்டவுடனேயே அதை பூதாகரமாக ஊதி பெரிதாக்க முனைந்து விட்டனர். இது தொடர்பான பல கிளை கதைகளை புனைந்து அதற்கு சாதி சாயத்தை பூசிவிட்டனர், அதாவது பிராமணர்களான அர்ச்சகர்கள் ஜனாதிபதியிடமும் அவரின் மனைவியிடமும் அவர் தலித் என்பதால் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக செய்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டன. இவர்கள் உருவாக்கியிருக்கும் இந்த கதையில் ஏராளமான ஓட்டைகள் உண்டு, அதன் வழியே நன்கு உண்டு பெருத்த யானை கூட வெளியேறக்கூடும்.

அதில் சிலவை இங்கே:

ஜூன் 28 அன்று எடிட்டர்ஸ் கில்டின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சேகர் குப்தா, பதிவிட்டிருந்த டிவீட்டில், பூரியில்  ‘சாதியக்குணம் படைத்த அர்ச்சகர்கள்’ ஜனாதிபதி கோவிந்த் மற்றும் அவரின் மனைவியும் மிகவும் மோசமான முறையில் நடத்தியதில் எந்த ஆச்சரியமும் இல்லை என தெரிவித்திருந்தார்.

இதில் கொள்கையாளர்கள் கவனிக்க தவறிய கூர்மையான உண்மை என்னவெனில், அந்த கோவிலில் இருக்கும் 36 வகையான அர்ச்சகர்களில் ‘நிஜோகா’ என அழைக்கப்படுபவர்கள் பிராமணர்களே அல்ல. உதாரணமாக, மஹாபிரசாத கூடத்தில் கிழக்கு பகுதி அன்னக்கூடத்தில் சமைப்பவர்கள் கும்பாரா இனத்தவர்கள். இன்னும் ஆழமாக பார்த்தால், அங்கிருக்கும் தலைமை அர்ச்சகர்களில் அதீத பலனை அனுபவிக்கும் அர்ச்சகர்களான தைத்தாபதி இனத்தவர்கள், பழங்குடிகளின் வழித்தோன்றல்களே.  பகவான் தன்னுடைய பழைய உடலை விட்டு நீங்கி புதிய வடிவம் எடுக்கும் விஷேசமான நபகாலேபரா நிகழ்ச்சியின் போதும் வருடாந்திர ரத யாத்திரையின் போதும் இவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர்.

இதை தவிர்த்து, இங்கே பலவிதமான அர்ச்சகர்கள் வகுப்புகள் உள்ளன, உதாரணமாக சுயரா, போய், பிமனபது, பிஷாய் போன்றவை. இவர்கள் எல்லாம் பிராமாணர்கள் அல்லாதவர்கள். ஆனால், கடவுளுக்கு சேவை செய்யும் அர்ச்சகர்கள் அனுபவிக்கும் அனைத்து சலுகைகளையும் இவர்களும் பெறுகின்றனர். எனவே, ஜனாதிபதி தலித் என்பதற்காக அவர் மோசமாக நடத்தப்பட்டார் என சொல்லப்படும் கற்பனை கதையின் உருவம் இத்தளத்தில் உடைந்து சிதைகிறது. ஆனாலும், கூட சேகர் குப்தா உண்மையை பேசுவார் என நாம் எதிர்பார்க்க முடியாது.

குஜராத் எம்.எல்.ஏ-வும் காங்கிரஸ் கட்சியின் கூஜாவுமான ஜிக்னேஷ் மேவானி ஒரு படி மேலே சென்று இதை மனுஸ்மிரித்தி என காரணம் கற்பித்து பா.ஜ.க-வுடன் இணைந்து ஓர் பதிவினை இட்டுள்ளார்.

அன்றாட சம்பிரதாயங்கள் அல்லது தினசரி சடங்குகள், விவகாரங்கள் என எதுவும் மனுஸ்மிரித்தியால் நிர்வகிக்கப்படுவதில்லை. உண்மையை சொன்னால், ஒடிய மக்கள் யாருக்கும் என்னை உட்பட எவருக்கும் மனுஸ்மிரித்தி என்றால் என்ன என்ற பிரஞ்கையே இல்லை. இந்த கோவில் ஶ்ரீ ஜெகநாதர் கோவில் நிர்வாக உறுப்பினர்களால் நிர்வகிக்கப்பட்டு ஒடிசா கலெக்டரின் தலைமையின் கீழ் இயங்கி ஒடிசா மாநில அரசின் கீழ் செயல்படுகிறது. இந்த கமிட்டி முதல்வருக்கும் ஒடிசா சட்டத்துறை அமைச்சகத்திற்க்கும் அறிக்கையை அளித்து வருகிறது. பிஜீ ஜனதா தளம் தலைமையேற்றிருக்கும் ஒடிசா அரசின் வருவாய் பட்டியலின் கீழ் அந்த அர்ச்சகர்களின் பெயர்கள் வகுக்கப்பட்டுள்ளன. இது குறித்து நாம் முன்னரே எழுதியிருந்தாலும் கூட, அரசியலில் புள்ளிகளை அள்ளுவதற்காக வடகாம் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கடவுளை குறித்து கூட பொய்யுரைக்க ஆரம்பித்துவிட்டார்.

தேர்ந்த வரலாற்றாசிரியர் ராம் குகா அவர்கள் தன்னுடைய மலிவான விளம்பரத்திற்காக இந்திரா காந்தியை வழிபடுவது போல் பாவனை செய்கிறார், தன்னுடைய எண்ணவொட்டத்தை நிலைநிறுத்தி கொள்ள வசதிக்கேற்றார் போல் புழுகவும் செய்கிறார்.

அந்த கோவிலினுள் ஹிந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. இது பெளத்தர்கள், ஜெயின் மற்றும் சீக்கியர்கள் அனைவரையும் உள்ளடக்கியதே. இதனுடைய வடிவமைப்பின் மீதும் உள்ளிருக்கும் தெய்வத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டமையால் இந்த கோவில் கிட்டதட்ட 18 முறை மூடப்பட்டுள்ளது மற்றும் பல முறை படையெடுக்கப்பட்டுள்ளது. 12-ஆம் கிபி முதல் இந்த கோவிலின் காலவரிசையை வரலாற்று பதிவாக “மடலா பாஞ்ஜி”யில் தொகுத்துள்ளனர், இது சரித்திர சாட்சியாக இருக்கிறது.

எனவே இந்திரா காந்தி, பார்சி இனத்தவரை மணந்தவர், இவர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது வகுக்கப்பட்ட விதியின் கீழ் நிகழ்ந்த யதார்த்த சம்பவம். இதே காரணத்திற்காக, ஏராளமான புகழ்பெற்ற மனிதர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமல் போன கதைகளும் உண்டு. இதை மையமாக கொண்டு குகா அவர்கள் மிக செளகரியமாக காந்தியை குறித்த பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி அனுமதிக்கப்படாமல் போனதன் காரணம், அவர் இஸ்லாமியர் மற்றும் கிருஸ்துவர்களின் படை, பரிவாரங்கள் சூழ பயணம் மேற்கொண்டார் என்பது தானே தவிர, குகா அவர்கள் குறிப்பிடுவதை போல் அவர் தீண்டாமையை ஒழிக்க நினைத்தார் என்பது அல்ல.


பூரி ஆலயத்தில் கடந்த காலத்தில் அர்ச்சகர்கள் சிலர் தவறாக நடந்து கொண்டார்கள் என்பதும் சிலரை தாக்கினார்கள் என்பதும் உண்மைக்கு புறம்பானதல்ல. சில கைகலப்புகள் ஆலயத்தினுள் ஏற்பட்டதை அடுத்து அது குறித்த முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு சம்மந்தபட்ட அர்ச்சகர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிலைமை இப்படியிருக்க, அவர்கள் ஒருபோதும் யாருடைய சாதியையோ, இனத்தையோ அல்லது சமூக அந்தஸ்த்து குறித்தோ கேள்வி எழுப்பி அவமதித்தது இல்லை. அவர்கள் சந்தர்பவாத குற்றவாளிகள். எனவே, பொருந்தாத இடத்தில் சாதியின் பெயரை சொல்லி இனியும் விளையாடாதீர்கள்.

இறுதியாக, மதசார்பின்மை என்ற முகமூடியை அணிந்திருக்கும் மகாஜனங்களை நாம் வேண்டி கொள்வது, உங்கள் மஹாபிரபுவையும் அவரின் பரிவாரங்களையும் அவர்களின் மலிவான அரசியலிலிருந்தும் நாற்றமெடுக்கும் நச்சுகருத்துக்களிலிருந்தும் தள்ளியிருக்க சொல்லுங்கள். கோவிலுக்குள் பிரச்சனைகள் உண்டு, ஆனால் அது நீங்கள் தீட்டும் சதித்திட்டத்திற்கும் உங்கள் சுய நல்லொழுக்கங்கள் சார்ந்ததோ அல்ல என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

Article based on Inputs from OpIndia

SG Suryah is an Advocate practising in the High Court of Madras & Company Secretary by profession. Currently he is the Vice President of BJYM (BJP Youth Wing) of Tamil Nadu.

Share