செய்திகள்தமிழ் நாடு

ஸ்டாலின் வேண்டாம் என்று கூறியும், கேட்காமல் பேனர் வைத்து பொது மக்களை அச்சுறுத்தும் தி.மு.க-வினர்

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர், அன்பில் மகேஷ் பொய்யா மொழியின் உறவினரின் திருமணத்திற்கு, தி.மு.க தொண்டர்கள், மக்களுக்கு இடையூறாக, உதயநிதி ஸ்டாலினின் பேனர்களை வைத்து கூத்தடித்துள்ளனர். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையை தாண்டி அந்த திருமண மண்டபம் இருப்பதால், அந்த பைபாஸ் சாலை முழுவதும் பல பேனர்களை தி.மு.க தொண்டர்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர்கள் வைத்துள்ளனர். அதிலும் ஒரு பேனரில் உதயநிதி ஸ்டாலினை, “செயல் தலைவரின் தளபதியே”, என்று எழுதப்பட்டிருந்தது சிரிப்பாக இருந்தது. இதை தி.மு.க செயல் தலைவர் செய்யக்கூடாது என்று சொல்லியும் தி.மு.க தொண்டர்கள் இவ்வாறு உதயநிதி ஸ்டாலினிற்கு பேனர்கள் வைத்துள்ளனர்.

இதனால் பொது மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். திருச்சி மாநகரத்தில் வசிக்கும் நபர் ஒருவர் கூறியது ” திமுக தொண்டர்கள் யாரும், அவர்கள் தலைவர் ஸ்டாலின் சொல்லும் பேச்சை கேட்பதில்லை. இன்னும் அந்த கட்சி பேனர்கள் வைக்கும் பழக்கத்தை விடவில்லை. இது மக்களுக்கு மிக எரிச்சலாக உள்ளது”.  ஸ்டாலின் கூறுவதை தி.மு.க தொண்டர்கள் கேட்பதில்லை போன்ற வார்த்தைகளை பொதுமக்கள் கூறுவது, தி.மு.க கட்சி நிலையான நிலையில் இல்லை என்பதை பொது மக்கள் உணர்ந்துள்ளார்கள் என்பதையே காட்டுகிறது.

சட்டமன்ற உறுப்பினர் மகேஷ், உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய  நண்பர் என்பதால் மகேஷின் ஆதரவாளர்கள் உதயநிதிக்கு பதுக்கல் வைத்துள்ளார்கள் என்று ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஸ்டாலின் கரூர் மாவட்டத்தில், சனிக்கிழமை பங்கேற்ற கூடத்திலும், உதயநிதி ஸ்டாலினிற்கு பல பதுக்கல்கள் வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Picture Credits : The New Indian Express

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close