செய்திகள்தமிழ் நாடு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கர்நாடக உறுப்பினர்களை மத்திய அரசே நியமித்தது : தமிழக ஊடகங்களின் கள்ள மௌனம்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றி காவிரி மேலாண்மை ஆணையத்தை உருவாக்கிய மத்திய அரசு கடந்த மாதம் இதை அதிகாரப்பூர்வமாக இந்திய அரசின் அரசிதழில் வெளியிட்டது. இந்த காவிரி  மேலாண்மை ஆணையத்திற்கு மாநிலங்களை தங்கள் உறுப்பினர்களை நியமிக்குமாறு மத்திய அரசு கூறியது. தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உறுப்பினர்களை நியமித்தும் பல நாட்களாக காலக்கெடுவை கடந்தும் கர்நாடகா அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தங்களின் உறுப்பினர்களை நியமிக்காமல் இருந்தது.

மத்திய அரசே கர்நாடக அரசின் சார்பில் உறுப்பினர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டது என்று தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் செய்தி கூறியுள்ளது. இதன் பிறகு, கர்நாடக வேறுவழியின்றி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும், ஒழுங்காற்று குழுவுக்கும் கர்நாடக அரசு உறுப்பினர்களை நியமித்தது என்றும் அந்த செய்தி கூறியது. மத்திய அரசு தானாகவே கர்நாடகாவின் உறுப்பினர்களை நியமித்ததை பற்றி தமிழ் ஊடகங்கள் பேசாமல் இருப்பது மிகவும் ஆச்சிரியமாக உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டு சந்தித்தல் வரும் ஜூலை மாதம் இரண்டாம் தேதி டெல்லியில் நடக்க உள்ளது. இதில் எத்தகைய கோரிக்கைகளை எழுப்பவேண்டும் என்பது பற்றி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் உறுப்பினர்களிடம் விவாதிக்க ஒரு கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழகத்திற்கு வரவேண்டிய 177 TMC தண்ணீரை எவ்வாறு, எவ்வப்போது, எந்த அளவில் காவிரி மேலாண்மை ஆணையம் வழங்கும் என்ற கோரிக்கைகளை எழுப்புமாறு இந்த கூட்டத்தில் பேசப்பட்டன என்று ஊடக வட்டாரங்கள் கூறுகின்றன.

Picture Credits – Hindustan Times

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close