தமிழ் நாடு

10 ரூபாயில் மருத்துவம்? எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு வரப்பிரசாதம் !

கொங்கு மண்டலத்தில் பெருந்துறையில் ஆரம்பித்து அனைவரும் எங்களுக்குத்தான் வேண்டும் என்று வற்புறுத்தும் அளவுக்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் அப்படி என்னதான் இருக்கிறது. அம்மருத்துவமனை அமையப் பெற்றால் என்னென்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கப்போகிறது என்ற கேள்வி பலரிடத்திலும் எழுந்துள்ளது. பெரிய பெரிய வி.ஐ.பிகளை போலவே  சாமானியர்களுக்கும் உலகத் தரமான சிகிச்சை எளிதாகக் கிடைக்குமா? என்ற விவாதங்களும் மற்றொருபுறம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளன.
அனைத்து மருத்துவ வசதிகளையும், மருத்துவக் கல்வியையும் ஒரே இடத்தில் வழங்க டெல்லியில் 1956-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை. எதிர்காலத்தில் நோய் வராமல் நிரந்தரமாகத் தடுக்கவும், இங்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய சுகாதாரத் துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படக் கூடியது.

இந்தியாவிலேயே ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை உலகத் தரம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு சாமானியனும், பெரும் பணக்காரர்களும் சிகிச்சை பெறக்கூடிய வகையில் இலவச சிகிச்சையும், மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட சலுகைக் கட்டண அடிப்படையிலான சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

எய்ம்ஸ்-ன் சிறப்பம்சங்கள்:

  • கொள்ளை லாபம் பார்க்கும் மருத்துவமனைகளை போல அல்லாமல் வெறும் ₹10-ல் கூட மருத்துவம் பார்க்க முடியும் என்பது ஆச்சர்யமான ஒன்று.
  • மிக அரிதான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க ₹2 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
  • எய்ம்ஸ் உடன் அமையவிருக்கும் மருத்துவ கல்லூரிக்கு தனி தேர்வு நடத்தி மாணவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். 5 ஆண்டுகளுக்கு கட்டணம் ₹26 ஆயிரம் மட்டுமே. விடுதி கட்டணம் ₹1000 மட்டுமே.
  • எம்.பி.பி.எஸ் முதல் அனைத்து மருத்துவ படிப்புகளும் உள்ளன.
  • ₹6 லட்சம் ஆகும் சிறுநீரக அறுவை சிகிச்சை, எய்ம்ஸ்-ல் ₹8 ஆயிரம் மட்டும் போதுமானது.
  • உலகில் தேசிய முக்கித்துவம் வாய்ந்த நிறுவனங்கள் 91-ல் எய்ம்ஸ் ஒன்று.
  • தனியார் மருத்துவமனைகளில் X-Ray எடுக்க ₹300 ரூபாய், ஆனால் எய்ம்ஸ்-ல் ₹30 மட்டுமே கட்டணம்.
  • ஆஞ்சியோ அறுவை மாற்று சிகிச்சைக்கு மற்ற மருத்துவமனைகளில் ₹10 ஆயிரம் செலவாகும். எய்ம்ஸ்-ல் ₹1000 தான்.
  • இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு பணிபுரிய செல்லக்கூடாது. இவர்களுக்கான வீடுகள் மருத்துவமனை வளாகத்திலேயே அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்படும்.

நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்பவருக்குக் கூட ஏதாவது உடல்நலக் குறைபாடு என்றால் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில்தான் சிகிச்சை வழங்கப்படுகிறது. அப்படியொரு மருத்துவமனை மதுரையில் அமைவது சிறப்பு. அந்த மருத்துவ நிறுவனத்தில் படிப்பது, பணிபுரிய வாய்ப்பு கிடைப்பது தென் தமிழகத்தின் மருத்துவர்களுக்கு பெருமைக்குரிய விஷயம். எந்த மண்ணில் ‘#GoBackModi’ என்று கூறி அவமானப்படுத்தினார்களோ, அவர்களுக்காகவே அடிக்கல் நாட்ட வரும் பாரத பிரதமர் மோடியின் வருகைக்காக காத்திருக்கின்றனர் மக்கள். கால சக்கரம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதற்கு இது மிகச்சிறந்த முன்னுதாரணம்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close