சிறப்பு கட்டுரைகள்

சென்னை கவர்னர் மாளிகையில் சாட்டையை சுழற்றும் ஆளுநர்: ராஜ் பவன் செலவுகள் பாதியாக குறைப்பு, லட்சக்கணக்கில் அரசு பணம் சேமிப்பு

இந்திய திருநாட்டின் ஆணிவேராக விளங்கும் அரசியல் அமைப்புச் சட்டததையும், அதன் மாண்பை பேணிக்காக்கும் பொறுப்பும், கடமையும் இந்திய குடியரசு தலைவர் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட நடுவண் அரசுக்கும் ,ஒவ்வொரு மாநிலத்தில் ஆளுநருக்கும் அவரால் நியமிக்கப்படும் மாநில அரசுக்கும், யூனியன் பிரதேசதங்களில் துணை நிலை ஆளுநருக்கும் அவரால் நியமனம் செய்யப்படும் அரசுக்கும் உண்டு. அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழியே என்ற பழமொழிக்கேற்ப தலைமை பீடத்திலிருப்பவர்கள் நன்நெறிகளை பின்பற்றி நாட்டின் குடிமக்களை நல்வழிப்படுத்திட வேண்டும். சிக்கனம் வீட்டை காக்கும் சேமிப்பு நாட்டை காக்கும் என்பது ஒரு மனிதனுக்கான அந்த கால முதுமொழி. ஒரு அரசனின் சிக்கனம் ஒட்டுமொத்த மக்களின் பொருளாதார மேன்மைக்கான சிக்கனம் என்பதை பசுமரத்தாணியாக எல்லா ஆட்சி தலைமைகளும் பதிய வைத்துக் கொள்ளலாம். சுதந்திர இந்தியாவில் தமிழ் நாட்டு ஆளுநர் பொறுப்பில் பலர் தங்களுடைய பணியை திறம்பட செய்திருக்கின்றனர் என்று சொன்னால் மிகையாகாது. இந்த வரிசையில் தாய் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் தமிழகத்தின் 20-வது ஆளுநராக பணியாற்றிக் கொண்டிருக்கும் பன்வாரிலால் புரோஹித்தைப் பற்றிய கட்டுரை இது.

ஆய்வுகளுக்கு பெயர் போன தமிழ் நாடு ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர்:

பிரதான எதிர்க்கட்சியின் விமர்சனத்தை பொருட்படுத்தாமல் தன் ஆய்வுகளையும் மக்கள் சந்திப்புகளையும் மேற்கொண்டு வருகிறார்கள், தமிழ் நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவர்கள். தொடர்ந்து தங்களது செயல்பாடுகளின் மூலம் ஆளுநர் அல்லது துணை நிலை ஆளுநர் பதவிகள் ஒரு அலங்கார பதவி அல்ல, தங்களுக்கு மக்களின் நன்மையையும் அரசியல் அமைப்புச் சட்டத்தையும் காக்கும் பொருட்டு தங்களுக்கு கொடுக்கப்பட்ட  பொறுப்பு என்பதை நிரூப்பித்து வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதல்வர்களைப் பற்றி விமர்சனங்களிருக்கலாம், ஆனால், இங்கு இருக்கும் ஆளுநர்களகன் ஆய்வு பணிகள் இதுவரை மக்கள் காணாத ஒன்று. குறிப்பாக தமிழ் நாட்டின் ஆளுநருடைய சிக்கன நடவடிக்கைகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

சிக்கனத்தின் சிகரம் தமிழ் நாடு ஆளுநர்:

அரசாங்களின் வீண் செலவுகளும் ஆட்சியாளர்கள் சிக்கனமற்றத் தன்மையும் பெருமளவு பேசப்படும் இந்த காலத்தில் தமிழக ஆளுநர் மாளிகையில் மேற்கொள்ளப்படும் சிக்கன நடவடிக்கைகள் எல்லா அரசுகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஒரு முன்மாதிரி. அக்டோபர் 2017 முதல் மார்ச் 2018 வரை ராஜ்பவனின் ஒட்டுமொத்த செலவுகள் 80 விழுக்காடு குறைந்திருக்கின்றன. அதாவது, ஏப்ரல் 2017 முதல் செப்டம்பர் 2017 வரை ₹1.68 கோடியாக இருந்த ஒட்டுமொத்த செலவு அக்டோபர் 2017 முதல் மார்ச் 2018 காலக்கட்டத்தில் ₹30.3 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளன. சுமார் ₹1.3 கோடி மக்களின் பணம் வீண் விரயமாவது தடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டு ஆளுநரின் உத்தரவின் பேரில் ஆளுநர் மாளிகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்:

சிக்கனம் சோறு போடும் என்பர். தனது சிக்கன நடவடிக்கையை சமையல் கேன்டினிலிருந்து அரம்பித்திருக்கிறது ஆளுநர் மாளிகை. தனியார் பெரும் அங்காடிகளிலிருந்து வாங்கப்பட்ட மளிகை பொருட்களை தமிழ் நாடு அரசின் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம்  உரிய ரசிதோடு வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஆளுநர் கேன்டினில் மிகவும் மலிவாக ₹10 என்று இருந்த விலையை ₹80 ஆக மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கும், காலை சிற்றுண்டிக்கு ₹50 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. சாப்பிட்டு ஆளுநர் உட்பட அனைவரும் அதற்கான பணத்தை தர வேண்டும் என்பது ஆளுநரின் உத்தரவு. இதன் மூலம் ₹41 லட்சமாக செலவிடப்பட்ட தொகை ₹9 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் பயணசெலவு குறைப்பு:

ஆளுநர் ஆய்விற்காக பெருமளவு சுற்றுப்பயணம் செய்வது வழக்கம். ஆளுநர் தனி ஹெலிகாப்டர் பயண்படுத்துவதில்லை. மாறாக ரயில்(குளிர்சாதன முதல் வகுப்பு) மூலமாகவும், விமானமென்றால் எகானாமி கிளாஸிலும் பயணம் மேற்கொள்கிறார். ஆளுநரோடு குறைவான நபர்களே பயணம் செய்கின்றனர். சுமார் ₹80 லட்சம் செலவிடப்பட்ட பணம் ₹4.75 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மின்சிக்கன நடவடிக்கைகள்:

தேவையற்ற இடங்களிலிருந்த காற்று பதனாக்கிகள்(ஏ.சி-கள்) அகற்றப்பட்டுள்ளன. பழைய கழல் விளக்குகள் (tube lights) மற்றும் ஒளி விளக்குகளுக்கு மாற்றாக மின்சாரத்தை சேமிக்கும் எல்.ஈ.டி விளக்குகள் மாற்றப்பட்டுள்ளன. சோலார் பவர் தட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின்சிக்கன நடவடிக்கைகள் மூலம் ₹28.57 லட்சமாக இருந்த ராஜ்பவன் மின்சார செலவு கடந்த ஆறு மாதங்களில் ₹11.99 லட்சமாக குறைந்துள்ளது.

ஆளுநரின் உத்தரவை செயல்படுத்தப்படும் பொருட்டு மேற்கொள்ளப்படும் நீர் சிக்கனம் மற்றும் இதர சிக்கன நடவடிக்கைகள்:

ஆளுநர் மாளிகையில் நடத்தபடும் அலுவல் கூட்டங்களில் மட்டும் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன. அலுவல் கூட்டங்கள் தவிர்த்து மற்ற குடிநீர்  தேவைகளுக்கு எதிர்ச்சவ்வூடு பரவல் (Reverse Osmosis) மூலம் கிண்டி ராஜ்பவனில் குடி தண்ணீர் பெறப்படுகிறது. முக்கிய விருந்தினர்களுக்கு மட்டும் பூச்செண்டு கொடுத்து வரவேற்க்கப்படுகின்றன. இதர பூ தேவைகளுக்கு  ராஜ்பவன் தோட்டத்திலிருந்து பெறப்படுகின்றன. தோட்டப் பராமரிப்பு செலவுகள் ₹11.9 லட்சத்திலிருந்து ₹2.80 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த ஆளுநர் மாளிகையின் பராமரிப்பு செலவு ₹65 ஆயிரமாக குறைக்கப் பட்டுள்ளது. முந்தைய காலக்கட்டத்தில் ₹3.2 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருந்தது.

ஆளுநரின் அலுவலகத்தின் சிக்கன நடவடிக்கைகள் உணர்த்தும் நல்ல விஷயங்கள், இந்த கட்டுரை ஆளுநர் பன்வஹாரிலால் புரோஹித் அவர்களை புகழ்வதற்காக மட்டும் எழுதப்படும் கட்டுரை அல்ல. மின்சாரம், தண்ணீர் போன்ற வளங்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை ஆளுநர் மேற்கொண்ட நடவடிக்கைகள்  உணர்த்துகின்றன.

அரசியல்வாதிகளும் அரசியல் தலைவர்களும் தங்கள் படாடோபங்களை மாற்றிக் கொள்வார்களா?

கர்மவீரர் காமராஜர், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் போன்ற பெருந்தலைவர்கள் நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக இருந்தார்கள். வாழ்ந்த போதும், மறைந்த பின்னும் வாழ்க்கை நன்நெறிகளை விதைத்து இருக்கிறார்கள். இந்த காலத்தில் அரசியல் தலைவர்கள் வருகிறார்கள் என்றவுடன் மக்களுக்கு இடையூராக கட் அவுட் வைப்பார்கள். ஒரு கவுன்சிலர் கூட அடம்பரமாக வாழும் இந்த காலத்தில் ஆளுநரின் இந்த நடவடிக்கை இந்திய துணைக்கண்டத்திற்கே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதெல்லாம் கண்ணுக்கு தெரியாமல் தி.மு.க-வும் அதன் செயல் தலைவர் ஸ்டாலினும் ஆலுனரை கண்மூடித்தனமாக எதிர்ப்பதில் என்ன உள்நோக்கம் என்று மக்கள் குழம்பி உள்ளனர். அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் செய்யும் வீண் செலவுகளை மிச்சப்படுத்தி ஏழைகளுக்கு உதவலாம். அவ்வாறு செய்தால் பாரதம் ஒளிரும் தமிழ் நாடு மிளிறும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close