தமிழ் நாடு

எல்லை மீறிய ஸ்டாலின்… எப்படியும் 7 வருடம் உறுதி!

ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சி சரியில்லை ஆளுநர் ஆட்சியை கலைத்து விட வேண்டும் என்று கூறும் ஸ்டாலின், அதே ஆளுநர் தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்ய சென்றால், வரம்பை மீறி செயல்படுகிறார் என்று கருப்பு கொடியை தூக்கிக்கொண்டு வந்து விடுகிறார். இதையெல்லாம் பார்த்தால் புகார் மனுவை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு, அந்த புகாரின் பேரில் காவலர்கள் நடவடிக்கை எடுக்க குற்றம் நடந்த பகுதிக்கு சென்றால், மனுவை கொடுத்தவனே குத்துவேன், மிரட்டுவேன் என்பதை போல உள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பொறுத்த வரையில், மாநில அரசாங்கத்தின் தலைவராக முதல்வர் இருந்தாலும், ஒட்டுமொத்த அரசிற்கும் தலைவர் ஆளுநரே. ஆளுநர் பதவி அவசியமில்லாத பதவி என்று கூறுகின்றனர். உண்மையில் ஆளுநருக்கு இருக்கும் அதிகாரம் நெருக்கடி நிலையின் போது தான் தெரியவரும். இந்தியாவில் குடியரசு தலைவரை கூட நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து பதவிநீக்கம் செய்ய முடியும், ஆனால் ஆளுநரை இடம் மாற்றவோ அல்லது திரும்ப அழைக்கவோ செய்ய முடியுமே தவிர, பதவி நீக்கம் செய்ய முடியாது. அந்த அளவிற்கு அதிகாரம் படைத்த பதவி. ஒரு மாநிலத்தில் ஆட்சி நிர்வாகம் சரியில்லை என்றால் குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்பி, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் அதிகாரமும்  அவரிடமே உள்ளது.

தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு தான் செய்கிறாரே தவிர, அதிகாரிகளுக்கு கட்டளையிடுவதில்லை. ஆனால், தி.மு.க-வினர் ஆளுநர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் கருப்பு கொடியை தூக்கிக்கொண்டு சென்று அவரை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். அதிகாரம் மீறுகிறார் என்றால் அரசியலமைப்பின் எந்த பிரிவின் கீழ் மீறுகிறார் என்று ஆதார பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து வழக்கமாய் நாங்கள் பாடிய புராணத்தை தான் பாடுவோம் என்று முழங்கிக்கொண்டு வருகிறார்.

உண்மையில் ஆளுநர் பணியில் குறுக்கீடு செய்தால் இந்திய தண்டனை சட்டத்தின் படி 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்க முடியும். தமிழகத்தில் அப்படி செய்து மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மனக்கசப்பு வந்துவிடக்கூடாது என்று ஆளுநர் தரப்பு அமைதி காக்கிறது. இருந்த போதிலும், தி.மு.க-வினர் எல்லை மீறி வருவதால் இது தொடர்பான எச்சரிக்கை ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close