தமிழ் நாடு

கோஷம் எல்லாம் வேஷம்: உடைந்தது​​ திரா’விடத்தின்’ உண்மை முகம்!​ ஸ்டாலின் ஶ்ரீரங்கம் விசிட்

‘உயர  உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது’ என்பதை போல மேடைக்கு மேடை வாய் கிழிய கடவுள் வழிபாடு எதிர்ப்பு குறித்தும், சிலை வழிபாடு குறித்தும்​ கொ​ச்சைப்படுத்தி பேசி தாங்கள் ஆன்மீகவாதியல்ல என்று மார்தட்டிக்கொண்டாலும், அவ்வப்போது மீசை மண் தரையில் பட்டு சிறு துளி அளவேனும் ஆன்மீக மண் மனம் தொற்றிக்கொள்கிறது. ‘தான் ஆடா விட்டாலும் தன்​ தசை ஆடும்’ என்பதை போல தன்னை கட்டுப்படுத்தி கட்சிக்கொள்கையை கடைபிடிக்க நினைத்தாலும், மரபு வழி வந்த பழக்கம் மண்ணோடு மண்ணாக போகாது என்பதை பறைசாற்றும் வண்ணம், ஆன்மீக நாட்டத்தை நோக்கி ஓடி வருகின்றனர் திராவிட இயக்கத்தினர்.

பெரியார் விதைத்த வித்து, அண்ணாவால் தி.மு.க-வாக எழுச்சி பெற்று, காமராஜரையே தோற்கடித்து அரியணையில் அமர்ந்தது. அன்றைக்கே மொழியை ஒரு ஆயுதமாகவும், பேச்சு ஒன்றை மட்டுமே தாரக மந்திரமாகவும் கொண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் மற்றும் பல்வேறு போராட்டத்தின் மூலமாக மக்களின் மனங்களை சலவை செய்து தமிழகத்தை ஆளும் பாதையில் திராவிட இயக்கங்கள் சவாரி செய்ய ஆரம்பித்தன.

பின்னர் தாங்கள் வைத்தது தான் சட்டம், போட்டது தான் உத்தரவு என்பதை போல ஆங்கங்கே புல்லுருவிகள் போல சில இயக்கங்கள் முளைத்து, மக்களின் மத நம்பிக்கைக்கு எதிராகவும், தனி மனித சுதந்திரத்தை பறிக்கும் விதமாகவும் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். தங்களை பெரியாரின் வழித்தோன்றலாக உருவகப்படுத்திக்கொண்டு சாதி எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கலப்பு திருமணம், தாலி கட்டும் முறை ஒழிப்பு என்று பல்வேறு யுக்திகளை கையில் எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றை வைத்தும் அரசியல் செய்ய ஆரம்பித்தனர்.

கோவில்களுக்கு செல்ல மாட்டோம். எங்கள் வீட்டில் பூஜை செய்ய மாட்டோம் என்று வைராக்கியத்தோடு கூறி வந்த திராவிட கழகத்தினர் இன்றைக்கு மெல்ல மெல்ல எதை எல்லாம் எதிர்த்தார்களோ அதையே முன்னெடுத்து நடத்தும் அளவிற்கு மாறி இருப்பது அரசியலில் ஊறிய பலருக்கு நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.​ ​

நேற்று​ காலை ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ததும் அந்த வகையில் தான் சேரும். எந்த கோவிலின் முன்பு வழிபாட்டை எதிர்த்து பெரியார் சிலை வைத்தார்களோ, இன்றைக்கு அங்கேயே சென்று வழிபடும் நிலைக்கு வந்து விட்டனர். கொள்கை, கோஷம் என்று வெற்று முழக்கங்களை மக்களிடத்தில் வெளிக்காட்டி போலி அரசியல் செய்து வருகின்றனர் என்பது இந்த சம்பவங்களின் மூலமாக உறுதியாகியுள்ளது.
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close