செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தற்கு, காவிரி டெல்டா அனைத்து விவசாய சங்கங்கள் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்

கடந்த மாதம் மோடி தலைமையிலான மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான அரசிதழில் கையெழுத்திட்டது. கர்நாடகத்தில் நடந்த அரசியல் மாற்றங்களுக்கு நடுவே சாதூர்யமாக, தமிழகத்திற்கு சாதகமாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு. ஆனால், இன்று வரையில் குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசாங்கம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக பிரதிநிதிகளை நியமிக்காமல் இருக்கிறது. IPL போட்டி சென்னையில் நடந்தால் இளைஞர்களின் மன நிலை திசை திரும்பி விடும் என்று கூறி IPL போட்டியை சென்னையிலிருந்து விரட்டிவிட்டு தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க தடையாக இருக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஒரு அறிக்கை கூட விடாமல் இருக்கும் தமிழக அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்தை தமிழ் கதிர் வெளியிட்டது.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்தும், காவிரியில் உரிய காலத்தில் கிடைக்க வேண்டிய நீரினை பெற்றுத்தர வலியுறுத்தியும் காவிரி டெல்டா அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்தனர். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது டெல்டா பகுதியை சார்ந்த பா.ஜ.க தமிழக பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உடன் இருந்தார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் பொன்னார்.

தமிழக அரசியல்வாதிகளின் போலி காவிரி நாடகத்தையும், மோடி அரசின் உண்மையான விவசாய நலனையும் விவசாயிகள் உணர்ந்ததையே இந்த சந்திப்பு காட்டுகிறது. மோடி அரசை விவசாயிகளின் எதிரியாக உருவகப்படுத்தியுள்ள தமிழக ஊடகங்கள், இந்த செய்தியை வெளியிடாமல் இருப்பது, மோடி எதிர்ப்பு அரசியலுக்கு தமிழக ஊடகங்கள் துணை போகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close