23 ஐரோப்பிய நாடுகளில் இருந்து 24 சமீபத்திய ஐரோப்பிய திரைப்படங்கள் இந்தியா முழுவதும் 11 நகரங்களுக்கு பயணிக்கிறது இந்த திரைப்பட விழா திருவிழாவில் முதலாவதாக லிட்டில் ஹார்பர் என்ற ஸ்லோவேக்கிய திரைப்படம் திரையீடு.

சமீபத்திய ஐரோப்பிய திரைப்படங்களின் மீது தனிக்கவனம் செலுத்தும் வகையில் புது தில்லியில் உள்ள சிரி ஃபோர்ட் அரங்கத்தில் இன்று ஐரோப்பிய ஒன்றிய திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு திரைப்பட விழாவில் திரையிடப்படும் 23 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 24 சமீபத்திய ஐரோப்பிய திரைப்படங்கள் உலக சினிமா ஆர்வலர்களுக்கு சில அசாதாரண கதைகளை காட்சிப்படுத்தும். ஐரோப்பிய ஒன்றிய திரைப்பட திருவிழா இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்பட திருவிழா இயக்குனரகத்தால் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தூதரகங்களுடன் இணைந்து தில்லியில் உள்ள பல்வேறு திரைப்பட அமைப்புக்ளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த திரைப்பட திருவிழா புது தில்லி, சென்னை, போர்ட் பிளேர், புனே, புதுச்சேரி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம், திருச்சூர், ஐதராபாத் மற்றும் கோவா ஆகிய 11 நகரங்களில் ஜூன் 18 முதல் ஆகஸ்ட் 31 வரை நடத்தப்படும். வேற்றுமையை கொண்டாடும் வகையில் இந்த ஐரோப்பிய ஒன்றிய திரைப்பட திருவிழாவில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரேஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, இத்தாலி, லத்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், நெதர்லாந்து, போலந்து, போர்த்துகல், ஸ்லோவேக்கியா, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் நாடுகளில் இருந்து திரைப்படங்கள் திரையிடப்படும்.

சிறப்பு கவனம் பெறும் வகையில் இந்த ஆண்டு ரசிகர்கள், மாணவர்கள் மற்றும் திரைப்படம் உருவாக்குவோர் கடாரினா கரனக்கோவா (ஸ்லோவேக்கிய தயாரிப்பாளர்), பவுலா ஓரிட்ஸ் (ஸ்பெயின் இயக்குனர்), சர்வடோர் அல்லோகா (இத்தாலிய இயக்குனர்), யன்னிஸ் கோரிஸ் (கிரேக்க இயக்குனர்), டக்ளஸ் போஸ்வெல் (பெல்ஜியம் இயக்குனர்) மற்றும் ஆடம் ஃபெக்கெட் (ஹங்கேரி நடிகர்) ஆகியோருடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெறலாம். இவர்கள் இந்த திரைப்பட திருவிழாவில் பங்கேற்க இந்தியாவுக்கு வருகை தருகின்றனர். இந்த திரைப்படத் திருவிழாவில் திரையிடப்படும் லக்சம்பர்க் திரைப்படத்தில் பணியாற்றியுள்ள இந்திய நடிகை நீனா குல்கர்னி கோவாவில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.

23-வது ஐரோப்பிய திரைப்படத் திருவிழாவில் சில அசாதாரண கதையம்சம் கொண்ட படங்கள் உள்ளன. வாழ்க்கையில் சைபர் உலகம் நுழையும் போது நிஜ வாழ்க்கை மங்கலாகுகிறது; வில்லன்கள் பங்கேற்று நடிக்கும் ஒரு நாடகம் மீட்புக்கான வாய்ப்பை அளிக்கிறது; மகிழ்ச்சியற்ற திருமண உறவில் சிக்கும் ஒரு மனிதன் தனது சுதந்திரத்தை உறுதிப்படுத்த அசாதாரண முயற்சிகளை மேற்கொள்ளுதல், கவர்ச்சிகரமான உளவியல் நிபுணரின் கவனத்தை ஈர்க்க நடைபெறும் போட்டியில் தன் தந்தை சிலருக்கு தொந்தரவு அளிப்பதை கண்டறியும் இசை விமர்சகர்; மற்றும் மூன்று குர்து சகோதரர்கள் பயணம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஒன்றாக வரும் போது கோபம் கொண்ட உறவினர்களால் பின் தொடரப்படுவது போன்ற அசாதாரண கதை கொண்ட திரைப்படங்கள் உள்ளன. இவை ஐரோப்பிய ஒன்றிய திரைப்பட விழா 2018-ல் ஆர்வத்தை ஏற்படுத்தும் சில கதைகள் ஆகும்.

ஜூன் 18 முதல் 24 வரை தில்லியில் நடைபெறும் இந்த ஐரோப்பிய ஒன்றிய திரைப்பட விழா தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஐரோப்பிய திரைப்படங்களை நகருக்கு கொண்டு வருகிறது. இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்பட விழாக்கள் இயக்குனரகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய திரைப்பட விழா சிரி ஃபோர்ட் அரங்கத்தில் நடைபெறும்.

இந்த விழாவை தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலர் அமித் காரே, இந்தியாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவின் துணைத் தலைவர் ராய்முண்ட் மாகிஸ், திரைப்பட விழாக்கள் இயக்குனரக தலைமை இயக்குநர் சைதன்ய பிரசாத், ஸ்லோவேக்கிய குடியரசு தூதரக துணைத் தலைவர் கடாரினா டோம்கோவா ஆகியோர் முன்னிலையில் சிரி ஃபோர்ட் வளாகத்தில் ஜூன் 18-ம் தேதி மாலை 6.00 மணிக்கு தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர் தொடங்கி வைக்கிறார். இந்த ஆண்டு விழாவில் திரையிடப்படும் லிட்டில் ஹார்பர் என்னும் ஸ்லோவேக்கிய திரைப்படத்தின் தயாரிப்பாளர் கடாரினா க்ரனகோவா தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார். பவுலா ஆர்டிஸ் (ஸ்பெயின் இயக்குனர்), சால்வடோர் அல்லோகா (இத்தாலிய இயக்குநர் ஆகியோர் அவர்களது படங்கள் திரையிடப்படும் போது அங்கு வருகை புரிவார்கள்.

விருது பெற்ற திரைப்படமான லிட்டில் ஹார்பர் திரைப்படம் இரண்டு குழந்தைகளின் அப்பாவித் தனமான செயல்பாடுகள் எவ்வாறு அவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்ற சம்பவங்களால் ஊக்கம் பெற்றதாகும். இது வீட்டில் இருப்பதை விட தெருக்களில் இருப்பதை பாதுகாப்பாக உணரும் குழந்தைகளின் கதை, கற்பனை உலகத்திற்கும் கடுமையான வாழ்க்கை நிஜங்களுக்கும் இடையே வரும் துணிவுமிக்க ஆயுதங்களை விரும்பும் குழந்தைகளைப் பற்றிய கதையாகும். பத்து வயதாகும் ஜர்க்கா, தாயாக இருக்க இன்னும் தயாராகாத தன் தாயுடன் வாழ்கிறாள். பெரும்பாலான நேரங்களில் அவள் தனிமையில் இருக்கிறாள். அன்பை பெற வேண்டும் என்ற விருப்பம் மற்றும் முழுமையான செயல்பாடு கொண்ட குடும்பம் ஒன்றை அமைக்கும் உந்துதலுடன் அவர் தன்னைத் தானே இரு குழந்தைகளின் தாயாக ஆக்கிக் கொள்கிறாள்.

திரைப்படங்கள் ஆங்கில வசன வரிகளுடன் திரையிடப்படும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் நுழைவு அனுமதிக்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றிய திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள திரைப்படங்கள்:

தி மேஜிக் ஆஃப் சில்ரன் (ஆஸ்திரியா), லாபிரிந்தஸ் (பெல்ஜியம்), விக்டோரியா (பல்கேரியா), கவ்பாய்ஸ் (குரேஷியா), பாய் ஆன் தி பிரிட்ஜ் (சிப்ரஸ்), டைகர் தியரி/தியோரி டைக்ரா (செக் குடியரசு), வாக் வித் மி/டே ஸ்டாண்ட் ஹாஃப்டிக் (டென்மார்க்), லேண்ட் ஆஃப் மைன் / அண்டர் சாண்டெட் (டென்மார்க்) தி மேன் ஹூ லுக்ஸ் லைக் மி / மினு நாகோ ஒனு (எஸ்தோனியா), அனெக்ஸ்பெக்டட் ஜர்னி (பின்லாந்து), 9 மன்த் ஸ்டெர்ச் / 9 மோயிஸ் ஃபெர்மி (பிரான்ஸ்), ஹவுஸ் வித்தவுட் ரூஃப் / ஹவுஸ் ஒனி டாஷ் (ஜெர்மனி), கிஸ்ஸிங்? / ஆண்டஸ் ஃபிலியவுண்ட்? (கிரீஸ்), கில்ஸ் ஆன் வீல்ஸ் (ஹங்கேரி), டரண்டா ஆன் தி ரோடு (இத்தாலி), தி லெஸ்ஸன் / இஸ்லாய்டுமா கட்ஸ் (லத்வியா), வென் யு வேக் அப் (லிதுவேனியா), எ வெட்டிங் / நோசெஸ் (லக்சம்பர்க்), லெட்டர் ஃபார் தி கிங் (நெதர்லாந்து), எ பிரேவ் பஞ்ச் (போலந்து), மதர் நோஸ் பெஸ்ட் (போர்ச்சுகல்), லிட்டில் ஹார்பர் / பைட்டா லாட் (ஸ்லோவேக்கியா), தி பிரைடு / லா நோவியா (ஸ்பெயின்) மற்றும் எடர்னல் சம்மர் (ஸ்வீடன்).

ஐரோப்பிய ஒன்றியம் பற்றி:

28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் உலகின் பெரும் பொருளாதாரமாகவும் சீனா மற்றும் இந்தியாவுக்கு அடுத்து அதிக மக்கள் தொகை கொண்டதாக மூன்றாவது இடத்தில் உள்ளது. அதிக அளவில் வேறுபாடுகளைக் கொண்டுள்ள போதிலும் இந்த நாடுகள் அடிப்படை விழுமியங்களான: அமைதி, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மற்றும் மனித உரிமைகள் மீது மரியாதை ஆகியவற்றின் மீது உறுதி கொண்டவையாக திகழ்கின்றன. கூட்டு நலன் விவகாரங்களில் முடிவுகள் எடுக்கும் வகையில் அவை பொது நிறுவனங்களை அமைத்து ஐரோப்பிய அளவில் ஜனநாயக முறையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. எல்லையற்ற ஒற்றை சந்தை மற்றும் ஒற்றை நாணயம் (யூரோ) ஆகியவற்றை உருவாக்கி, அது 19 உறுப்பு நாடுகளால் ஏற்கப்பட்டு, ஐரோப்பிய ஒன்றியம் வணிகம் மற்றும் வேலைவாய்ப்புக்கு குறிப்பிடத்தக்க ஊக்கம் அளித்துள்ளது. நீடித்திருப்பதற்கான கொள்கைகளிலும் அது முன்னிலையில் உள்ளது.

Share