விளையாட்டு

இரானில் கட்டாயப்படுத்தி பர்தா அணிய சொன்னதால் ஆசிய நாடுகள் போட்டியில் பங்கு கொள்ளவில்லை: இந்திய செஸ் வீராங்கனை பளீர்

இந்திய பெண் செஸ் வீராங்கனை சௌம்யா ஸ்வாமிநாதன் ஈரானில் நடைபெறவுள்ள ஆசிய நாடுகள் செஸ் போட்டியில் பங்கு கொள்வதாக இருந்தது. ஆனால் தான் இப்போது பங்கு கொள்ளப் போவதில்லை எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் இந்த செய்தியை தெரிவித்துள்ளார்.

“ஜூலை 26-ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள, ஆசிய நாடுகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நான் பங்கு கொள்ள போவதில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஈரானில் நடைபெறவுள்ள இந்த போட்டியில், ஈரானின் சட்டத்தின் படி, கட்டாயமாக புர்கா அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது, என் அடிப்படை சிந்தனை சுதந்திரம், கருத்து சுதந்திரம்,  மனசாட்சி மற்றும் அடிப்படை மத சுதந்திரத்திற்கு எதிரானதாக நான் கருதுகிறேன்.  தற்போதைய சூழ்நிலையில், என் உரிமைகளை பாதுகாப்பதற்காக, ஈரானுக்குச் செல்வதல்லை என்ற முடிவை எடுத்துள்ளேன். சாம்பியன்ஷிப்பை ஏற்பாடு செய்யும் போது வீரர், வீராங்கனிகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருப்பது ஏமாற்றத்தை தருகிறது. சாம்பியன்ஷிப் போட்டிகளில் எங்கள் விளையாட்டுக்களுக்கான தேசிய அணியோ அல்லது அணிவகுப்புகளையோ அல்லது ஸ்போர்ட்ஸ் ஆடையையோ அணிய வேண்டுமென்று எதிர்பார்க்கும் அமைப்பாளர்களை நான் புரிந்து கொள்கிறேன், ஆனால் நிச்சயமாக விளையாட்டுகளில் நடைமுறைப்படுத்தக் கூடிய மத உடை குறியீடுக்கு இடமளிக்க கூடாது. தேசிய அணியில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு முறையும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதை மிகப்பெரிய கௌரவமாக கருதுவேன். அத்தகைய முக்கியமான சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க முடியாது என்பதில் நான் மிகவும் வருந்துகிறேன். விளையாட்டுக்காக பல தியாகங்களை செய்வதற்கு விளையாட்டு வீரர்கள் தயாராக உள்ள அதே வேளையில், வாழ்வின் முன்னுரிமையாக இருக்கும் சிலவற்றை வெறுமனே சமரசம் செய்ய முடியாது.” என்று அவருடைய முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவருடைய முகநூலில் பலரும் தங்களுடைய ஆதரவை அந்த வீராங்கனைக்கு தெரிவித்து வருகின்றனர். உலகமயமாகியுள்ள இன்றைய நிலையில், உலகில் உள்ள பல மத அடிப்படை வாதத்தை எதிர்கொள்ள இந்தியாவின் இளைய சமுதாயம் தயாராகி விட்டதையே இது காட்டுகிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close