நாட்டின் முன்னணி செய்தி ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத செய்திகளையும், போலி செய்திகளையும் வெளியிடுவது சகஜமாகி வருகிறது. இதற்கு சற்றும் வேறுபடாமால் தமிழக செய்தி ஊடகங்களும் செய்திகளை திரித்து வெளியிடுவது தொடர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக NDTV வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி திரு பிரணாப் முகர்ஜி அவர்களின் மார்ப் செய்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

RSS விழாவில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பங்குக்கொண்டதை பல காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வந்தனர். இதனை அடுத்து, காங்கிரஸ் கட்சியினர் பிரணாப் முகர்ஜி அவர்களின் புகைப்படத்தை போட்டோஷாப்பில் மார்ப் செய்து பரப்பி வந்தனர்.காங்கிரஸ் IT செல் உறுப்பினர் @RuchirSharmaINC என்பவர் வெளியிட்ட போலி புகைப்படத்தை, NDTV செய்தியில் பதிவிட்டுள்ளது.

Advertisement

NDTV யின் ஊடக தர்மத்தை பலரும் பல சமயத்தில் விமர்சனம் செய்துள்ள நிலையில், தற்போது ஒரு காங்கிரஸ்காரர் வெளியிட்ட புகைப்படத்தை வெளியிட்டிருப்பது, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு நிலைப்பாட்டை NDTV எடுத்துள்ளது அப்பட்டமாகியுள்ளது.

இந்த போலி புகைப்படத்தை பா.ஜ.க-வினர் தான் பரப்பி வருகின்றனர் என்று எதிர்கட்சிகள் மேற்கொண்ட பொய் பரப்புரை தவிடுபொடியாகி உள்ளது.

Share