அரசியல்தமிழ் நாடு

சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் -தூத்துக்குடி சம்பவத்தில் இருந்து பாடம் கற்குமா தமிழக அரசு?

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சேலம் நகரத்திலிருந்து சென்னை நகரத்திற்கு புதிய எட்டு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனின் சில பகுதி விவசாய நில வழியாகவும் செல்கிறது. இந்த காரணத்தால், பொது மக்களும், விவசாயிகளும் இந்த திட்டத்தை எதிர்க்கின்றனர். அரசு இவர்களின் இழப்பிற்கு ஈடு செய்ய நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்றச் சட்டத்திற்கு கீழ் மக்களுக்கு இழப்பீடு கொடுக்கும். அரசு தரப்பினருக்கும், இழப்பை எதிர்கொள்ளும் மக்கள் தரப்பினர்க்கும் முழு பேச்சுவார்த்தை நடந்து, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இழப்பீடு கொடுத்த பிறகுதான் இந்த திட்டம் தொடரும்.

இந்த சமயத்தில், மாவோயிஸ்ட் போன்ற பயங்கரவாத இயக்கங்கள் சேலம், தர்மபுரி போன்ற நகரங்களில் மக்களோடு மக்களால் ஊடுருவி, இந்த திட்டத்தை மக்களிடம் தவறாக சித்தரித்து அவர்களை வன்முறைக்கு தூண்ட முயற்சி செய்து வருகிறார்கள். இந்த இயக்கங்கள் ஊடுருவி உள்ளதை ஒரு முன்னணி தமிழ் செய்தித்தாள் வெளியிட்டு இருந்தது.

மாவோயிஸ்ட் மற்றும் 17 பயங்கரவாத இயக்கங்கள் ஊடுருவி உள்ளதாக தகவல் வருகிறது. இந்த இயக்கங்கள் திரை பிரபலங்களை மக்களிடம் அழைத்து சென்று மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் வகையில் பேச வைக்கிறார்கள்.

இதே போன்ற சம்பவம் தான் தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடந்தது. மாவோயிஸ்ட் போன்ற பயங்கரவாத இயக்கங்கள் மக்களை போராட தூண்டிவிட்டு, பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டு பெரிய கலவரத்தை உண்டாக்கினர். இதனால் 13 பேர் உயிரை இழந்தனர். சேலம், தருமபுரி போன்ற நகரங்களில் பயங்கரவாத இயக்கங்கள் ஊடுருவதுற்கும், தூத்துக்குடியில் அவர்கள் எப்படி மக்களோடு மக்களாக ஊடுருவி வன்முறையை தூண்டினார்கள் என்பதற்கும் பல ஒற்றுமை உள்ளது.

தூத்துக்குடி போன்ற சம்பவம் வேறு எங்கும் நிகழாமல் இருக்க அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உளவுத்துறை தூத்துக்குடியில் கவனம் குறைவாக இருந்ததுபோல் சேலம் சென்னை நெடுஞ்சாலை பிரச்னையில் இருக்கக்கூடாது. இந்த நெடுஞ்சாலையால் ஏற்படும் நன்மைகளையும், மக்களுக்கு ஏற்படும் நில இழப்பை அவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் இழப்பீடு செய்யப்படும் என்பதை மக்களுக்கு எடுத்து கூறுவது தமிழக அரசின் கடமையாகும்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close