செய்திகள்

“தலைவா, ஒரே ஒரு போட்டோ தலைவா? “என்ற ரசிகரிடம்  “sure டா கண்ணா” என்று நெகிழவைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்குபெற்றவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இன்று(30.05.2018) காலை, தன் வீட்டில் இருந்து விமான நிலையம் புறப்பட்டு சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதை அறிந்த சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் ஒருவர், அவர் வீட்டில் இருந்து கிளம்பிய உடன், தனது பைக்க்கில் சென்று,  சூப்பர் ஸ்டார் சென்ற காரை விடாமல் பின் தொடர்ந்து சென்றிருக்கிறார்.

இதை கவனித்த சூப்பர் ஸ்டார்,  தனது காரை நிறுத்தியுள்ளார். பிறகு சூப்பர் ஸ்டார் அருகில் சென்ற அந்த ரசிகர்,  “தலைவா, ஒரே ஒரு போட்டோ தலைவா? ” என்று கேட்டுள்ளார். அதற்கு சூப்பர் ஸ்டார்,  “sure டா கண்ணா” என்று கூறி,  ரசிகனுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழுந்துள்ளார் அந்த ரசிகர். தொடர்ந்து, பல சக ரசிகர்களும் புகைப்படம் எடுத்து கொண்ட ரசிகருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close