செய்திகள்

திருமணமான பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்து, பெண்ணை கொன்று தலைமறைவான கிறிஸ்துவ பாதிரியார் : போலீஸ் வலைவீச்சு

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம்,  போயனபல்லேயில் கிறிஸ்துவ பாதிரியாராக இருப்பவர், வர்லா சுப்பாராயுடு. இதே பகுதியை சேர்ந்த 30 வயது திருமணமான பெண் தனது சகோதரி வீட்டில் வாழ்ந்து வந்தார். சகோதரியும் அவரது கணவரும் குவைத்தில் வாழ்கின்றனர். அவரது குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக அந்த பெண் தனது சகோதரி வீட்டில் இருந்து வந்தார். ஒவ்வொரு மாதமும் செலவிற்காக குவைத்தில் இருந்து வர்லா சுப்பாராயுடு என்ற கிறிஸ்துவ பாதிரியாரின் வங்கி கணக்கின் மூலம் பணம் அனுப்பப்பட்டு வந்தது.

இதை பயன்படுத்திக் கொண்டு,  கிறிஸ்துவ பாதிரியார் அந்த பெண்ணிடம் கள்ள தொடர்பு வைத்துள்ளார். அந்த பெண் வேறொருவரிடம் பேசி வருவதாக கூறி, வீடு புகுந்து அந்த பெண்ணுடன் சண்டையிட்டு, கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தப்பிவிட்டார்.

அந்த பெண்ணின் கணவரும், ஊர் மக்களும் வீடு சென்று பார்த்தபோது, பெண் உயிரிழந்திருப்பதும், கொலை செய்து விட்டு பாதிரியார் தப்பி ஓடி விட்டதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கிறிஸ்துவ பாதிரியாரை தேடி வருகின்றனர்.

கிறிஸ்துவ பாதிரியார் மீது நம்பிக்கை வைத்து, பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது, ஒரு திருமணமான பெண்ணின் வாழ்க்கையை சீரழித்திருப்பது, அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Inputs – The Hindu

Pic Credits – Samajlive.in

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close