செய்திகள்

கிறிஸ்துவ ஆணவக் கொலை – தலித் கிருஸ்துவ இளைஞன் துடிக்க துடிக்க படுகொலை! 

கெவின் ஜோசப் கோட்டயம் பகுதியில் தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர். நடுத்தரமான குடும்ப பிண்ணனியை கொண்டவர். கெவின் டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரிக்கல் என்ஜீனியரிங் படித்துவிட்டு வேலைக்காக துபாய் சென்று, கடந்த ஜனவரி மாதம் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். நீனு கொல்லம் பகுதியில் வசதிப்படைத்த செல்வாக்குள்ள கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர். நீனு தாயார் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். இவர்களின் காதல் விவகாரம் நீனு குடும்பத்தினருக்கும், சகோதரர் ஷானு சாக்கோவிற்கும் பிடிக்கவில்லை.

பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி கெவின் ஜோசப்பும் – நீனுவும், கோட்டயத்தை அடுத்த எட்டுமனூர் பகுதியில் உள்ள துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்துக் கொண்டனர். இந்த விவகாரம் நீனு குடும்பத்திற்கு தெரிய வர, நீனு குடும்பத்தினர் மணமக்கள் இருவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு நீனு கட்டாயப்படுத்தி அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

தனது உறவினரான அனிஷ் வீட்டில் தங்கியிருந்தார் கெவின். ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு கும்பல் அனிஷின் வீட்டிற்கு வந்து கெவின் மற்றும் அனிஷை கடத்தி சென்றனர். அவர்களின் வீட்டையும் நொறுக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் முதலமைச்சர் பினராய் விஜயன் அரசு நிகழ்ச்சிக்காக அம்மாவட்டத்திற்கு வருவதாகவும் அதற்கான பணிகளில் தான் இருப்பதாகவும் துணை காவல் ஆய்வாளர் கூறி, விசாரணையை உரிய நேரத்தில் மேற்கொள்ள தவறி விட்டார். இதற்கிடையில், மதிய வேளையில் அனிஷை மட்டும் அந்தக் கும்பல் வீட்டில் இறக்கிவிட்டு சென்றனர். கெவின் குறித்து அனிஷ் கேட்டதற்கு தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். மறுநாள் காலை தென்மலா காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ள கால்வாயில், சடலமாகத் தான் கெவின் மீட்கப்பட்டார்.

கிறிஸ்துவ மதத்தில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் சமூக அநீதிகள் தொடர்ந்து வருகிறது. சமூக நீதி பேசும் அரசியல்வாதிகள், இந்து மதத்தில் உள்ள ஜாதி வேறுபாடுகளை மட்டும் வைத்து அரசியல் செய்கின்றனர். ஆனால், மற்ற மதத்தில் உள்ள பிரிவினைகளை பற்றி பேசாமல் இருப்பது, சிறுபான்மையினரின் வாக்கு வங்கி கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சமா என்ற கேள்வி தற்போது மக்களால் எழுப்பப்படுகிறது.

Reference Courtesy – Puthiya Thalaimurai

Photo Credits – Kollam News

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close