அரசியல்இந்தியா

பா.ஜ.க-வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தாலும் மோடியை அசைக்க முடியாது! என்ன சொல்கிறது தேர்தல் கணக்கு?

சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தலில் பா.ஜ.க விற்கு பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தலுக்கு பின்பு சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்து ஆட்சியமைத்தது. மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி 224-ல் வெறும் 37 எம்.எல்.ஏ-க்களை வென்றிருந்தாலும் காங்கிரஸின் பா.ஜ.க ஆட்சி அமைக்க கூடாது என்ற பிடிவாதத்தால் கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்றார். பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட், தெலுங்கு தேசம் மற்றும் பல பிராந்திய காட்சிகளை சார்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இதன் மூலம் 2019 மக்களவை தேர்தலில் பா.ஜ.க விற்கு எதிராக அனைத்து எதிர் கட்சிகளும் ஓர் அணியில் திரள வாய்ப்புள்ளது என்பது  தெளிவாக தெரிகிறது. ஆனால், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்தாலும் வெற்றி பெற முடியுமா என்பது கேள்வியாகவே உள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியாவின் அறிக்கையின் படி, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்தாலும் பா.ஜ.க-விற்கு மிக பெரிய இழப்போ, சவாலோ இல்லை. 2014 தேர்தலில் பெற்ற இடங்களை விட 56 இடங்கள் குறைவாக கிடைக்க வாய்ப்புள்ளது, இதுவும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேரும் பட்சத்தில் தான். பா.ஜ.க 46 இடங்களை உத்தர பிரதேசத்தில் மட்டும் இழக்கக்கூடும், அதுவும் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மெகா கூட்டணி வைத்தாலே இதுவும் சாத்தியப்படலாம் என்கிறது அந்த அறிக்கை. மஹாராஷ்டிராவில் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஒன்று சேர்ந்தாலும் ஆதிக்கம் செலுத்த இயலாது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மற்ற அனைத்து மாநிலங்களிலும் இந்த பிராந்திய கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் பா.ஜ.க வெறும் 10 இடங்களை மட்டுமே இழக்கக்கூடும் என்பது கூடுதல் தகவல். இவ்வளவு பெரிய கூட்டணி அமைந்தாலும் 226 இடங்களை வென்று பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். இதற்கு காரணம் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்ராகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், ஜார்கண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் எந்த பிராந்திய கட்சிகளும் இல்லை, அங்கே காங்கிரஸ் – பா.ஜ.க-வுக்கு மட்டும் தான் எப்போதும் போட்டி. அங்கு இந்த உதிரி கட்சிகளால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பயனும் இல்லை என்பதே நுண்ணரசியல்.

மோடி எதிர்ப்பு மட்டுமே கொள்கையாக இந்த கூட்டணிக்கு இருப்பதால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது மிகப்பெரிய சந்தேகமே. ஜனநாயகம், மதசார்பின்மை, ஊழல் எதிர்ப்பு ஆகிவற்றை இந்த கூட்டணி முன்னிலையாக வைத்தாலும் மக்களிடம் எடுபடாது. ஜனநாயகத்தை பற்றி வங்கதேசத்தின் மம்தா பாணர்ஜீயை கூட்டணியில் வைத்துக்கொண்டு பேச இயலாது. நடந்த பஞ்சாயத்து தேர்தலில் ஜனநாயகம் பல் இளித்ததை நாடறியும். காங்கிரஸை வைத்து கொண்டு ஊழல் எதிர்ப்பை பேச முடியாது. இடது சாரியை வைத்துக்கொண்டு தொழில் வளர்ச்சியை பற்றியும் பேச முடியாது. இப்படி அனைத்திலும் இந்த கூட்டணி கட்சிகள் முரண்பாடுகளுடன் இருப்பதால் தோற்கத்தான் வாய்ப்பு அதிகம்.

இந்த கூட்டணியின் ஸ்திரத்தண்மையும் கேள்வி குறியே. வரலாற்றில் மத்தியில் கூட்டணி ஆட்சி பரிசோதனைகள் பல முறை தோல்வியடைந்துள்ளது. 1977-ஆம் ஆண்டு இந்திரா காந்திக்கு எதிராக இதேபோல் ஒரு கூட்டணியை அமைத்தனர். 1989-ஆம் ஆண்டு ராஜிவ் காந்திக்கு எதிராக கூட்டணி அமைத்தனர். இரண்டும் தோல்வியில் முடிந்தது. 1996 ஆம் ஆண்டு அமைந்த கூட்டணி மிகவும் தடுமாறியது. மத்தியில் வெற்றியடைந்தே ஒரே காங்கிரஸ் இல்லாத 5 ஆண்டுகள் ஆட்சி நிறைவேறியது வாஜ்பாய் தலைமையிலான 1999 – 2004 தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான்.

உத்திர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிப்பர் என்று உறுதியாக கூற முடியாது. இந்த இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்தே பழகியவர்கள், நம் ஊரில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க போல. இது அனைத்து மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் பா.ஜ.க-விற்கு எதிரான சந்தர்ப்பவாத கூட்டணிகளுக்கும் பொருந்தும். பா.ஜ.க தனது வளர்ச்சி அரசியலை முன்னிறுத்தும். வளர்ச்சி மற்றும் இந்திய நலனுக்கான அரசியல் என்பதால் பா.ஜ.க-வே 2019 தேர்தலலிலும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. பலர் இணைந்தாலும் அசைக்க முடியாத மனிதராகவே மோடி திகழ்வார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Pic Credits – The Print.

Article Inputs – OpIndia.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close