தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்,  கிளர்ச்சியாளரிகளின் வன்முறையாக உருவெடுத்து, பொதுமக்கள் குடியிருப்பு, கலெக்டர் அலுவலகம், போலீஸ் வாகனங்கள் போன்றவை தீயிட்டு கொளுத்தப்பட்டன.

கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து போலீசாரை சரமாரியாக தாக்கினர். போலீசார் தங்களை பாதுகாக்க, கிளர்ச்சியாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில், துரதிஷ்ட வசமாக 10 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து,  நாட்டின் கவனத்தையே ஈர்த்துள்ளது இந்த போராட்டம்.

பிணத்தை வைத்து அரசியல் செய்வதில், கைதேர்ந்த தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இதையும் மோடி அரசிற்கு எதிரான அரசியலாக மாற்றி உள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ சிறுபிள்ளை தனமாக, ஆர்.எஸ்.எஸ் – யையும், போலீசாரின் துப்பாக்கி சூட்டையும் சம்பந்த படுத்தி, அடிப்படை ஆதாரமற்ற கருத்தை பதிவிட்டுள்ளார். இதற்க்கு ஆர்.எஸ்.எஸ்-ம்  பா.ஜ.க-வும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

உண்மை என்னவென்று சற்று ஆராய்ந்து பார்த்தால், காங்கிரஸ் ஆட்சியில் வலுக்கட்டாயமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தி.மு.க, அ.தி.மு.க அரசுகளின் முழு அனுமதியோடு இத்தனை ஆண்டுகளாக ஆலை செயல்பட்டு வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய அமைச்சர் ஆவதற்கு முன்பு, இந்த ஆலையின் இயக்குனராகவும் சட்ட ஆலோசகராக பணியாற்றினார் என்பதும் சரித்திரம்.

ஆனால்,  இந்த ஆலை நிறுவப்படக் கூடாதென்று 1995-இல் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தார், இன்றைய மத்திய இணை அமைச்சர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள். சமீபத்தில் கூட,  ஸ்டெர்லைட் நிறுவனம் தன்னை டீல் பேச அழைத்தது,  ஆனால் தான் ஒப்புக்கொள்ளவில்லை என்று பகிரங்கமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குற்றம் சாட்டினார் பொன்னார்.

இந்த சரித்திரங்கள் அனைத்தையும் மறைத்து,  போலீசாரால் சுட்டுக்கொல்ல பட்டவர்களை வைத்து மோடி அரசாங்கத்தின் மீது பழி போடும் தி.மு.க-காங்கிரஸ் கட்சிகளின் கொள்கை பரப்பு செயலாளர்கள் போல் தமிழக ஊடகங்கள் செயல்படுவது,  ஊடக தர்மத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகும்.

Share