இந்தியாசெய்திகள்

இனி எந்தவொரு விஜய் மல்லையாவும் நீரவ் மோடியும் தப்பிக்க முடியாது : ₹83,000 கோடியை கார்ப்ரேட்களிடம் இருந்து மீட்டெடுத்த மோடி அரசின் அதிரடி IBC திட்டம்

கார்ப்ரேட் நிறுவனங்கள் பெரும் அளவில் கடன்களை வங்கிகளிடம் இருந்து வாங்கிக்கொண்டு, பிறகு திரும்ப அளிக்க முடியாத நிலை ஏற்படும் போது,  நிறுவனத்தின் உரிமையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இந்த வரிசையில், முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் விஜய் மல்லையாவுக்கும், நீரவ் மோடிக்கும் கடன்களை வாரி வழங்கி இருந்தன. பிறகு, கடன்களை திரும்ப அளிக்க முடியாத நிலையில், அரசாங்கமிடம் இருந்து தப்பிக்க, இருவரும் நாட்டையே விட்டு வெளியேரினர்.

இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், வங்கிகள் தாங்கள் வழங்கிய கடன்களை திரும்ப பெறவும் வழிவகை செய்யும் வகையிலும், மத்திய அரசு அதிரடியாக புதிய திவால் சட்டத்தை அறிமுக படுத்தியுள்ளது. இதற்க்கு பெயர்,  Insolvency and Bankruptcy Code (IBC). இந்த திட்டம் பல கார்ப்ரேட் நிறுவனங்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. எனினும் நாட்டின் நலன் கருதி, மத்திய அரசாங்கம் இதை அமல்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், 90 நாட்களுக்கு மேல் கடன் பாக்கி செலுத்தப்படாமல் இருந்தால், அதை Non Performing Asset (NPA), அதாவது செயல்படாத சொத்தாக அறிவிக்கப்படும். இந்த கிடுக்கிப்பிடியின் மூலம்,  கார்ப்ரேட் நிறுவனங்கள், தாங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

Ministry of Corporate Affairs (MCA) அளித்த தகவலின் படி,  இதுவரை 2,100 கார்ப்ரேட் நிறுவனங்கள்,  ₹83,000 கோடி கடன் பாக்கிகளை திரும்ப அளித்துள்ளன. IBC திட்டதால் எஸ்ஸார், பூஷண் குழுமம் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் கடும் சிக்கலைச் சந்தித்தன. அவற்றின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து செயல்படாத நிலைக்குத் தள்ளப்பட்டன. இதனையடுத்து வங்கிகளில் வாங்கிய கடனை அவை திருப்பிச் செலுத்தியுள்ளன.

இது, சுதந்திர இந்தியாவின் மாபெரும் பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கையாக கருதப்படுகிறது. இனி எந்தவொரு விஜய் மல்லையாவும்,  நீரவ் மோடியும் தப்பிக்க முடியாது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close