இந்தியாசெய்திகள்

பா.ஜ.க-வுக்கு ஓட்டு போட்டதால் செருப்பு மாலையுடன் மானபங்கப்படுத்தப்பட்ட பெண் – காட்டாட்சியின் பிடியில் மம்தா ஆளும் வங்காளம்

மேற்கு வங்க மாநிலம், மேற்கு மிதுனப்பூரில், கிராம பஞ்சாயத்து நிர்வாகியின் மனைவிக்கு, செருப்பு மாலை போட்டு விட்டு, தோப்புக்கரணம் போட வைத்துள்ளனர், திரிணாமூல் கட்சியை சேர்ந்த குண்டர்கள். மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறி இவ்வாறு செய்துள்ளனர் திரிணாமூல் குண்டர்கள்.

ஆஷிஷ் பத்ரா என்ற திரிணாமூல் கட்சியை சேர்ந்த பூத் தலைவர் முன்னிலையில் நடந்த கட்டப் பஞ்சாயத்தில் 25 திரிணாமூல் குண்டர்கள் உடன் இருந்து அந்த பெண்ணை ஊர் முழுக்க செருப்பு மாலையுடன் வலம் வர வைத்து பின்பு திரிணாமூல் கட்சியின் அலுவலகம் முன்பு தோப்புக்கரணம் போட வைத்து அவமானப் படுத்தியுள்ளனர். அதன் பிறகு, அந்த பெண் மயக்கம் அடைந்து விழுந்து விட்டார். பிறகு உதவிக்கு எவருமே வரவில்லை.

அந்த பெண்ணின் கணவர், கோபால் தாஸ், திரிணாமூல் கட்சியை சேர்ந்தவர் தான். ஆனால், அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால், அந்த பெண் பா.ஜ.க-விற்கு ஆதரவு தெரிவித்ததாக பொய் குற்றசாட்டை சுமத்தி அவரை துன்புறுத்தியுள்ளனர், திரிணாமூல் குண்டர்கள்.

“பொய் காரணங்களை கூறி, என் மனைவியை ஊர் முழுக்க 1500 பேர் முன்னிலையில் செருப்பு மாலை போட்டு, தோப்புக்கரணம் போட வைத்து, அவமானப்படுத்தியுள்ளனர். திரிணாமூல் குண்டர்களுக்கு பயந்து, என் மனைவியை காப்பற்ற யாரும் வரவில்லை. கட்சிக்காக இத்தனை நாளாக அல்லும் பகலுமாக உழைத்ததற்கு, எங்களுக்கு இது தான் பரிசாக கிடைத்துள்ளது” என்று மிகவும் மன வேதனையுடன் கூறுகிறார் கோபால் தாஸ்.

இந்த ஜனநாயாக சீரழிவு சம்பவம் எந்த தமிழ் ஊடகங்களிலும் பதிவிடப்படவில்லை. பா.ஜ.க ஆளும் ஆட்சியில் தெருவில் நாய் அடிபட்டாலே கொக்கரிக்கும் ஊடகங்கள் பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் நடக்கும் அநியாங்களை சாய்ஸில் விடுவது தான் திராவிடம் பெற்றெடுத்த போலி மதசார்பின்மை.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close