தென் இந்தியாவில் பா.ஜ.க கால் ஊன்ற முடியாது என்று திராவிட கட்சிகளும், விடுதலை சிறுத்தைகளும், காங்கிரஸ் மற்றும் பிற லெட்டர் பேட் கட்சிகளும் கூறிக் கொண்டே வருகின்றன. கர்நாடக தேர்தல் முடிந்து, கர்நாடகத்தில் தனி பெரும் கட்சியாக பா.ஜ.க உருவெடுத்துள்ளது. தேர்தலுக்கு சென்ற 222 தொகுதிகளில் 104 தொகுதிகளை வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது பா.ஜ.க. முதல்வராக பதவி ஏற்ற எடியூரப்பா, பெருபான்மை நிரூபிக்க வழியின்றி ராஜினாமா செய்ததை தொடர்ந்து, தி.மு.க ஆதரவாளர்கள் இணையத்தில் #BJPMukthSouthIndia #SouthIndiaRejectsBJP என்ற Hash Tag – ஐ ட்ரெண்ட் செய்து சிலாகிதம் அடைத்து வருகின்றனர்.

ஆனால் உண்மை என்னவென்று சற்று ஆராய்ந்து பார்த்தால், எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்களின் கூட்டு எண்ணிக்கையின் படி தென்னிந்தியாவின் 2-வது மிகப்பெரிய கட்சியாக தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது பா.ஜ.க. தென் இந்தியாவில் பா.ஜ.க என்ற கட்சியே இல்லை என்ற வாதத்தை தி.மு.க-வினர் பேசி வரும் போது, தி.மு.க-வை விட பா.ஜ.க இந்த பிராந்தியத்தில் வலுவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

South India MLAs List Statewise

State  BJP  INC DMK ADMK TDP Communists
TamilNadu 0 8 89 117  0  0
Karnataka 104 78  0  0  0  0
Kerala 1 22  0  0  0 77
Andhra 4  0  0  0 127  0
Telengana 5 13  0  0 3 1
Puducherry 3 15 2 4  0  0
Total  117 136 91 121 130 78

இதே போன்று பாராளுமன்ற லோக் சபா என்று எடுத்துக் கொண்டாலும் அ.தி.மு.க-வின் 37 எம்.பி-க்களுக்கு அடுத்து 6 மாநிலங்களில் 5 மாநிலங்களில்(கூட்டணி கட்சியுடன்) ஒரு உறுப்பினரையேனும் கொண்டு மொத்தம் 21 எம்.பி-க்களை பெற்று தென் இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுத்துள்ளது. ஆனால், பா.ஜ.க இல்லா தென் இந்தியா என்று இணையத்தில் கூக்குரல் விடுத்து வரும் தி.மு.க-வினருக்கு லோக் சபாவில் ஒரு உறுப்பினர் கூட இல்லை என்பது தான் இதில் வேடிக்கை.

South India MPs(Lok Sabha) List Statewise

State  BJP  INC DMK ADMK TDP Communists
TamilNadu 1 0 0 37  0  0
Karnataka 17 9  0 0  0 0
Kerala 0 8  0 0  0 6
Andhra 2  0 0 0 15 0
Telengana 1 2  0  0 1 0
Puducherry 0 0 0 0  0  0
Total  21 19 0 37 16 6

ஆக, தென் இந்தியாவில் அசைக்க முடியாத சக்தியாக அனைத்து மாநிலங்களளிலும் இருப்பைக் கொண்டுள்ள பா.ஜ.க-வை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் கூட பெற முடிதாத ஸ்டாலினின் தி.மு.க ஆதரவாளர்கள் ஏளனம் செய்து நகையாடுவது மிகப்பெரிய முரண்.

Share