செய்திகள்தமிழ் நாடு

தமிழகத்தில் லவ் ஜிகாத் சம்பவங்கள் அதிகரித்து வருகிறதா? காதல் ஆசை காட்டி மதம் மாற்றப்பட்ட இளைஞன்

சென்னை படப்பையை சேர்ந்த தேஜாராம், துணி வியாபாரம் செய்து வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்லாடியை சொந்த ஊராக கொண்ட இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் ஜித்தேந்தர், 2014-ல் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து முடித்தார். அப்போது இவருக்கு  வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்த பெண் ஒருவர் அறிமுகமாகி, இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு திடீரென ஜித்தேந்தர் மாயமாகிவிட்டதை தொடர்ந்து, காஞ்சிபுரம்  மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலையத்தில் அவரது தந்தை இதுகுறித்து புகார் அளித்தார். பிறகு, ஆதார் எண்ணை வைத்து, ஜித்தேந்தர், மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்குள்ள மசூதியில் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதற்கான பயிற்சியை முடித்துள்ளார் ஜித்தேந்தர். மணிமங்கலம் போலீசார் அவரை அங்கு இருந்து மீட்டு கடந்த மார்ச் மாதம் தந்தையிடம் ஒப்படைத்து இருக்கின்றனர். மகன் திரும்ப சென்னை வந்ததும், குடும்பத்துடன் சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு சென்று விட்டார் தேஜாராம். அங்கு அவருக்கு இந்து மதப்படி கோயிலில் பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பினார். கடந்த மே மாதம்,  மீண்டும் ஜிதேந்தர், வீட்டிலிருத்து பணம் மற்றும் நகைகளை எடுத்து கொண்டு, மறுபடியும் காணமல் போய்விட்டார். அதிர்ச்சியடைந்த தேஜராம், தனது மகன் மதம் மாறி, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டால் நான் பெறுப்பேற்க முடியாது எனவும், தனது மகனை கண்டுபிடித்து தருமாறு ராஜஸ்தான் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில போலீசார் ஜித்தேந்தரின் செல்போனை சோதனை செய்ததன் அடிப்படையில், காதலிடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. பிறகு சென்னை வந்த ராஜஸ்தான் போலீஸ், கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இளம்பெண்ணை விசாரணை நடத்தியுள்ளனர்.

தனது மகனை மூளை சலைவை செய்து கட்டாய மதமாற்றம் செய்ததாக, போலீசாரின் விசாரணையில் தெரிவித்து இருக்கிறார் தேஜாராம். சமீபத்த்தில் மதம் மாற மறுத்த காதலியின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய இஸ்லாமிய இளைஞனின் செயலை பார்த்தோம் (http://kathironline.in/2018/05/01/lovejihadintn/). தற்போது காதலின் பெயரால் இந்து மதத்தை சேர்ந்த இளைஞன், இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தமிழக இந்துக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் லவ் ஜிகாத் சம்பவங்கள் அதிகரித்து வருகிறதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

Reference and Pic Courtesy : http://www.puthiyathalaimurai.com/news/crime/45224-chennai-girl-behind-religion-conversion.html

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close