அரசியல்தமிழ் நாடு

திருமாவளவனை துரத்தியடித்த தேனி பட்டியல் இன மக்கள்

அண்மையில், பெரியகுளத்தில், இஸ்லாமியர்களால் பட்டியில் இன மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தை ஊடகங்கள் பேச மறுத்ததை பார்த்தோம். (http://kathironline.in/2018/05/06/periyakulamviolence/) தமிழக ஊடகங்கள் மட்டும் இல்லாமல், திராவிட கட்சிகளும் விடுதலை சிறுத்தைகளும் இதை புறக்கணித்தன.

கட்சி துவங்கிய நாள் முதல், தாங்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்காக பாடுபடுகிறோம் என்று கூறிக்கொள்கின்றனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்தவர்கள். ஆனால், இந்த விவகாரத்தில் அவர்கள் 15 நாட்களாக வாயை திறக்கவே இல்லை. இதன் பிறகு பல தரப்பினரிடமும் இருந்து எழுந்த புகாரை அடுத்து, 15 நாட்களுக்கு பிறகு, திருமாவளவன் அவர்கள் தனது கட்சி தொண்டர்களுடன் பெரியகுளத்திற்கு சென்றார்.

ஆனால், அவரை சந்திக்க அக்கிராமத்தை சேர்ந்த பட்டியல் இன பெண்கள் மறுத்துவிட்டனர். கலவரம் நடந்து 15 நாட்களுக்கு பிறகு தற்போது திருமாவளவன் ஏன் வந்திருக்கிறார் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்கள். இதனை அடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், பெண்களை , சமாதானப்படுத்தி  திருமாவளவனை வந்து சந்திக்குமாறு வற்புறுத்தி அழைத்தும் அவர்கள் செல்ல மறுத்துவிட்டனர்.

அதன்பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களை மட்டும் திருமாவளவன் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டார். சிறுபாண்மையினரின் வாக்கு வங்கிக்கு பயந்து இந்த கலவரத்திற்கு எதிராக திருமாவளவன் குரல் கொடுக்காமல் இருந்தது தான், பட்டியல் இன மக்களின் புறக்கணிப்பிற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

Reference : https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/list-people-who-ignored-thirumavalavan

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close