உன்னாவோ கற்பழிப்பு வழக்கு சம்பந்தமாக பா.ஜ.க MLA-விற்கு தொடர்பு இருப்பதை சி.பி.ஐ உறுதிப்படுத்தியுள்ளது என்று அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், இந்த செய்திக்கும் சி.பி.ஐ-க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சி.பி.ஐ தெரிவித்துள்ளது. சிபிஐ-யில் இருந்து யாரும் இது போன்ற தகவல்களை எந்த ஊடகத்திற்கும் தெரிவிக்கவில்லை என்று சி.பி.ஐ விளக்கம் அளித்துள்ளது. இது சிபிஐ-யின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் பதிவிடபட்டுள்ளது.

ஆனால், அவசர அவசரமாக முந்தி அடித்துக்கொண்டு ஊடகங்கள் பொய் செய்தியை வெளியிட்டுள்ளது. கர்நாடக தேர்தல் நாளை நடைபெற உள்ள இந்த நிலையில், இது போன்று பொய் செய்திகளை ஊடகங்கள் பதிவிட்டிருப்பது, ஊடகங்களின் பா.ஜ.க எதிர்ப்பு மனப்பான்மையை நிரூபிக்கிறதா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

Times of India பத்திரிக்கை முதலில் இந்த போலி செய்தியை வெளியிட்டுள்ளது.

Link to Article

இது தொடர்பாக சி.பி.ஐ அளித்த விளக்கம்

Share