செம்மரக் கட்டை கடத்தலில்  சர்வதேச புள்ளியான, சேது மாதவனின் முக்கிய ஆதரவாளராக, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பாபு(48) செயல்பட்டு வந்தார். ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் வனப்பகுதியில் இருந்து, ₹500 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கடத்தி வந்து, தமிழகத்தின் பல இடங்களில், பாபு மறைத்து வைத்திருப்பதாக, கடந்த ஆண்டு, உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

(ஸ்டாலினுடன் பாபு)

இதையடுத்து, திருப்பதியில் ஜனவரி 23-ம் தேதி இரவு 10மணிக்கு, பாபு உட்பட ஐந்து பேரை, ஆந்திர போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பாபு மூலம் கடத்தி வந்த ₹500 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரிந்தது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின் பேரில், செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம், கடையநல்லூர் பஸ் நிலையத்தில் சங்கரன்கோவில் நேரு தெருவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் ₹25 ஆயிரத்தை கைப்பையில் வைத்து பேருந்துக்காக காத்து நின்றார். அப்போது, பேருந்து நிலையத்திற்குள் வேகமாக ஒரு கார் வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய 2 பேர் திடீரென்று மாரியப்பன் கையில் வைத்திருந்த பணத்தை பறித்துவிட்டு காரில் தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியப்பன் சத்தம் போட்டார்.

அப்போது, அந்த வழியாக வந்த தனிப்படை ரோந்து வாகனம் காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தது. பின்னர் காரில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் செங்கோட்டையை சேர்ந்த இம்ரான் (வயது 25), காதர் பிச்சை மகன் முகம்மது இப்ராகிம், பீர் முகம்மது மகன் சிகாத் முகம்மது (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

(ஸ்டாலினுடன் இம்ரான்)

இதில் கைது செய்யப்பட்ட இம்ரான் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும், அவர் செங்கோட்டையில் தி.மு.க. மாணவர் அணியை சேர்ந்தவர் என்பதும், தி.மு.க பிரமுகரின் மகன் என்பதும் தெரியவந்தது. வழிப்பறிக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு முன்பாக, குழந்தை, பெண்களுக்கு பாலியல் தொல்லை, வீடு அபகரிப்பு, குட்கா தயாரிப்புக்கு பாதுகாப்பு என தி.மு.க-வினரின் கொடுமைகளை பார்த்தோம் (http://kathironline.in/2018/05/03/dmklandtheft/). தற்போது கடத்தல், வழிப்பறி என்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக தி.மு.க-வினர் ஈடுபட்டிருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர் கட்சியாக இருக்கும் போதே இத்தனை அட்டூழியங்களை கட்டவிழ்த்து இருப்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் தமிழக மக்கள்.

Share