செய்திகள்தமிழ் நாடு

கிறிஸ்துவ துறவிகளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் என்ன வேலை? இணையவாசிகள் கொந்தளிப்பு!

உலக புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ஆயிரம் கால் மண்டபம் அருகே கிறிஸ்துவ மதத்தை சார்ந்த பெண் துறவிகள் பைபிள் ஓதுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாயின. இதனை தொடர்ந்து கொந்தளித்த இணையவாசிகள், எதற்காக இவர்கள் அங்கே சென்றனர், என்ன செய்கின்றனர் என்ற கேள்வியை முன்வைத்தனர்.

ஆயிரம் கால் மண்டபம் உள்ளே,  கிறிஸ்துவ மதத்தை சார்ந்த பெண் துறவிகளை அனுமதித்தற்கு, ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலின் Joint Commissioner-யை பணி நீக்கம் செய்ய வேண்டும் என ஒருவர் பதிவிட்டுருக்கிறார். அவர்கள் கோவிலின் உள்ளே, ஆகம விதிகளுக்கு எதிராக கிறிஸ்துவ மத பிரார்த்தனை செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதை பார்த்தால், கிறிஸ்தவ பெண் துறவிகளுக்கு, கட்டடக்கலை மீதும், சிற்பங்கள் மீதும் உள்ள பிரியமாக தெரியவில்லை என்று, வேரொருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இந்த சம்பவத்தைப் பற்றிய கருத்துகளை, பல இந்துக்கள் டிவிட்டரிலும், முகநூலிலும், வாட்ஸேப்பிலும் பகிர்ந்து வருகின்றனர். பணத்தை வாரி இரைத்து, அப்பாவி தமிழர்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்து வரும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close