ஊடக பொய்கள்

மத்திய அமைச்சர் உமா பாரதி கூறியதை திரித்து வெளியிட்ட புதிய தலைமுறை மற்றும் ஒன் இந்தியா! ஊடக தர்மம் என்ற ஒன்று உள்ளதா?

“தலித் மக்களை என் வீட்டிற்கு அழைத்து நான் விருந்து அளிக்கிறேன்” என்று மத்திய நீர் வள மேம்பாட்டு துறை அமைச்சர் உமா பாரதி அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக, மத்திய அமைச்சர்கள் தலித் மக்களின் வீட்டிற்கு சென்று உணவு அருந்துவது வழக்கமாக இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழகம் வந்திருந்த போது கோட்டநத்தம் ஊராட்சி பா.ஜ.க SC அணியை சேர்ந்த நிர்வாகி திரு. முருகன் அவர்களின் இல்லத்தில் மதிய உணவு அருந்தினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள், “பா.ஜ.க அமைச்சர்கள் தலித்துகளின் வீடுகளுக்கு செல்வது மட்டும் போதாது.  தலித் மக்களையும் தங்கள் வீடுகளுக்கு அமைச்சர்கள் வரவேற்று விருந்துக அளிக்க வேண்டும். அப்போது தான் சமூக நல்லினிக்கம் ஏற்படும். ” என்று கூறினார்.

அதை தொடர்ந்து மத்திய அமைச்சர் உமா பாரதி அவர்கள் “தலித் மக்கள் வீட்டிற்கு சென்று அவர்களுடன் சேர்ந்து உணவருந்தி அவர்களை புனிதப்படுத்த நான் ஒன்றும் கடவுள் ராமர் இல்லை. தலித் மக்களை என் வீட்டிற்கு அழைத்து நான் விருந்து அளிக்கிறேன். என் வீட்டிற்கு வந்து தலித் மக்கள், என்னோடு சேர்ந்து சாப்பிட்டால் நான் புனிதமடைவேன்” என்று கூறியுள்ளார். இதில் மத்திய அமைச்சர் தெளிவாக ஒரு சித்தாந்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். தலித் மக்கள் என் வீட்டிற்கு வந்து என்னோடு உணவருந்தி அவர்கள் என்னை புனிதப்படுத்த வேண்டுமென்று கூறியுள்ளார்.

தலித் மக்களை எவ்வளவு உயர்ந்த இடத்தில் தன் மனதில் வைத்திருந்தால் இப்படி பேசியிருப்பார் அமைச்சர். ஆனால், தமிழக ஊடகங்கள், குறிப்பாக புதிய தலைமுறை, மத்திய அமைச்சர் பேசியதை திரித்து அவர்கள் தலித் மக்கள் வீட்டில் உணவு அருந்துவதில்லை போன்ற தலைப்பை விஷம தனத்துடன் பதிவிட்டுள்ளது. ஆனால் உள்ளே செய்தியில் முழு விபரத்தை பதித்துள்ளது. ஒருவர் கூறாத கருத்தை திரித்து தலைப்பாக பதிவிட்டது கண்டிக்கத்தக்கது. இது மத்திய அமைச்சரின் நற்பெயரை கெடுப்பது மட்டுமல்லாமல் தலித் மக்களை கொச்சை படுத்தும் வகையாகவும் இருக்கிறது. இவ்வாறு மத்திய அமைச்சரின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும் தலித் மக்களை கொச்சை படுத்தும் வகையிலும் எதற்காக புதிய தலைமுறை ஈடுபட்டுள்ளது? என்ற கேள்வியை தமிழ் கதிர் முன்வைக்கிறது.

இதற்கு ஒரு படி மேலே போய் ஒன் இந்தியா எனும் கிசு கிசு ஊடகம் அப்பட்டமான பொய்யை கீச்சியுள்ளது. “தலித் வீடுகளில் உணவு உட்கொள்ள மத்திய அமைச்சர் உமாபாரதி மறுப்பு” என்று பதிவிட்ட கீச்சின் முழு விபரம் இங்கே.

ஊடக தர்மம் என்ற ஒன்று உள்ளதா? இவர்கள் ஏன் இவ்வாறு பொய்யாக ஒரு மத்திய அமைச்சர் பேசும் பேச்சை திரித்து கூற வேண்டும்? யார் ஆணைக்கு இணங்கி இந்த விஷம பிரச்சாரத்தில் இவர்கள் ஈடுபடுகிறார்கள்? என்று மக்கள் கருதுகிறார்கள்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close