கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொன்டவர் பிரகாஷ் ராய் என்கிற  பிரகாஷ் ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களி்ல்  வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். 1995-ஆம் ஆண்டு  இயக்குனர் கே.பாலச்சந்தர், டூயட் படத்தில் இவரை அறிமுகப்படுத்தினார்.

இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசை விமர்சித்தும், எதிர்த்தும் பேசி வருகிறார். வரும் மே 12 ஆம் தேதி, கர்நாடக சட்டசபைக்கு தேரதல் நடைபெற உள்ள சூழ்நிலையில், பெங்களூரில் ஒரு தனியார் தொலைகாட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார்  பிரகாஷ் ராஜ். அப்போது அவர்,  தான் பிரதமர் மோடியை விமர்சித்து வருவதால் தமக்கு பாலிவுட் எனப்படும் இந்தி திரைப்பட உலகில் வாய்ப்புகள் குறைந்து விட்டதாகவும், தமக்கு வாய்ப்பு தராமல் தடுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இந்நிலையில் அவர் நடித்த இந்தி படங்களின் கடந்த 4 ஆண்டு பட்டியலை தேடிப்பார்த்தால்,

1) 2014 ஆம் ஆண்டு இரு படங்களில் நடித்துள்ளார்.

2) 2015 ஆம் ஆண்டு எந்த இந்தி படத்திலும் நடிக்கவில்லை.

3) 2016 ஆம் ஆண்டும் எந்த இந்தி படத்திலும் நடிக்க வில்லை.

4) 2017 ஆம் ஆண்டு ஒரே ஒரு இந்தி படத்தில் நடித்திருக்கிறார்.

ஆக இந்தி படத்தில் கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 3 படத்தில் தான் நடித்துள்ளார். மோடியை டிவிட்டரில் கண்மூடித்தனமாக தாக்கி வருவது 2017-ல் இருந்து தான். ஒட்டுமொத்தமாக, பாலிவுட் எனப்படும் இந்தி படவுலகில், மோடி எதிர்ப்பாளர்களே அதிகம். தாவூத் இப்ராஹிம் போன்ற நிழல் உலகம், இந்த துறையில் ஊடுருவி இருப்பதால் மோடி எதிர்பாளர்களே நிறைந்துள்ளனர். அப்படியிருக்கையில் தன்னுடைய அரசியலுக்காக  பிரகாஷ் ராஜ் கூறிய உண்மைக்கு மாறான கருத்துக்களை மக்கள் மன்றத்தில் தமிழ் கதிர் வெளிப்படுத்துகிறது. உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் பொங்கும் பிரகாஷ் ராஜ் காவிரி விவகாரத்தில் மட்டும் எங்கே கர்நாடகா, தமிழ் நாட்டில் தனது படங்களுக்கு பிரச்சனை வந்து விடுமோ என்று கள்ள மெளனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது. புளுகுமூட்டை பிரகாஷ் ராஜ்? #JustAsking

Share