தமிழ் நாடு

இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தி.மு.க பிரமுகரின் மகன் உட்பட 3 இளைஞர்கள் கைது

தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த இளம்பெண் (25). இவர் கணவரை பிரிந்து, வாய் பேச முடியாத தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர், சேலம் போலீஸ் கமிஷனர் சங்கரிடம், கொடுத்த புகாரில், “சேலத்தை சேர்ந்த வாலிபர், தன்னை காதலிப்பதாக ஏமாற்றி, நண்பர்கள் இருவருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்”, என கூறியிருந்தார். இதன்பேரில் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

சேலம் அழகாபுரத்தை சேர்ந்த வாலிபர் நைம் மாலிக். இவர் இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 29ம் தேதி அரூரைச் சேர்ந்த இளம்பெண்ணை நைம் மாலிக், சேலம், ஏற்காடு, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது நைம் மாலிக், குளிர்பானத்தில் மதுவை கலந்து சாந்திக்கு கொடுத்துள்ளார். அதை குடித்து மயக்கம் அடைந்த சாந்தியை, சேலம் சத்திரத்தில் உள்ள ஒரு லாட்ஜூக்கு நைம் மாலிக் அழைத்துச் சென்றார். அங்கு தனது நண்பர்களான நபீஸ், ரஞ்சித் (எ) விக்னேஷ் ஆகியோரை வரழைத்திருக்கிறார். பிறகு 3 பேரும் சேர்ந்து, மயக்க நிலையில் இருந்த சாந்தியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில், நபீஸ் என்பவர் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த தி.மு.க மகளிர் அணி பிரமுகர் வள்ளியின் மகன் ஆவார்.

இதற்கு முன்னதாக, நீலகிரி மாவட்டம், குன்னூர் தி.மு.க. கிளை செயலாளராக பொறுப்பில் உள்ள கோபாலகிருஷ்ணன், இரண்டரை வயது குழந்தைக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.  சென்ற மாதம், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடந்த போராட்டத்தின் போது, தி.மு.க.வை சேர்ந்த பெண் நிர்வாகி, தி.மு.க.வினர் தனது இடுப்பைக் கிள்ளி மானபங்க படுத்தியதாக குற்றம் சாட்டினார். இதற்க்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் நீதி கிடைக்கும் வரை தனியாக போராடுவேன் என்று தன்னந்தனியாக போராட்டத்தில்  குதித்தார். இதனை தொடர்ந்து அந்த பெண் நிர்வாகி தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க வினரின் தொடர்ப்பு இருப்பதால் என்ன தவறு செய்தாலும் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் வந்ததால் நடக்கும் குற்றங்களா இவை?  

Reference : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=398824

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close