சூப்பர் ஸ்டார் நடித்த காலா படம் ஜுன் மாதம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தில் இடம்பெற்றுள்ள செம்ம வெய்ட்டு பாடல், நேற்று Youtube-ல் வெளியானது. பாடல் வெளியீட்டை நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அவரது டிவிட்டரில் வெளியிட்டார்.

Advertisement

இந்த பாட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் வெளியானது. வழக்கம் போல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது பாணியில் கலக்கியுள்ளார். பாடலை கேட்கும் போதே நடனமாட தூண்டுகிறது. இதை சூப்பர் ஸ்டாரின் நடிப்புடன் திரையில் பார்த்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

பாடலை பற்றி கருத்துகளை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். செம்ம வெயிட்டு பாடல் செமையாக இருப்பதாக நடிகை கஸ்தூரி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Share