கடந்த சில ஆண்டுகளாக, தமிழகத்தில் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் கிறிஸ்தவ மத மாற்ற நிகழ்வுகள் மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளன. தமிழக மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மத மாற்றம் செய்ய பல யுக்திகள் கையாளப் படுகின்றன. அதில் ஒன்று, ஏழை தமிழர்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை மதமாற்றம் செய்வது. இதற்கு தேவையான பணத்தை அந்நிய நாடுகளின் உதவியுடன் இயங்கும் NGO-க்கள் அளிப்பதாக பல இந்து அமைப்பை சார்ந்தவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, சென்னையை அடுத்த திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியில் மீனவ குடியிருப்பு உள்ளது.  மீனவர்களின் ஏழ்மையை சாதகமாக பயன் படுத்தி மீனவ வீட்டு பெண்களுக்கு பணம் கொடுத்து மதமாற்றம் செய்வதாக மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.  மேலும் தாங்கள் காலம் காலமாக வழிபடும் இந்து கோவிலுக்கு அருகிலேயே, கிறிஸ்தவ சபை தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த கிறிஸ்தவ சபை கட்டுவதற்கு முறையான அனுமதி எதுவும் பெறப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மீனவ மக்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேசினர். சட்டத்திற்கு புறம்பாக கிறிஸ்தவ சபை திறப்பது உறுதி செய்யப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, மீனவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

முன்னதாக, திருநெல்வேலியில் மணிமூர்த்திஸ்வரத்தில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோவில் கோபுரத்தின் முன், அனுமதி இன்றி கிறிஸ்தவ மக்கள், இடுகாடு கட்டியுள்ள செய்தி அண்மையில் வெளியானது. இது போன்று, இந்து கோவில்களுக்கு அருகில் அனுமதி இல்லாமல் கிறிஸ்தவ மதவெறியர்கள் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் கிறிஸ்தவ மதம் சார்ந்த இடுகாடையோ அல்லது சபையையோ நடத்துவது வழக்கமாகி உள்ளது.

பணம் கொடுத்து கிறிஸ்தவ மதத்தை மக்களிடையே திணிப்பது எப்படி நாட்டின் மத நல்லிணக்கத்தை காக்கும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இந்த மத மாற்ற வியாபாரத்தை தடுக்க அரசோ அல்லது திராவிட கட்சிகளோ எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. நடவடிக்கை எடுக்காவிட்டாலும் அதை எதிர்த்து ஒரு சிறிய குரல் கூட கொடுப்பதில்லை. ஏனெனில், இதையெல்லாம் பேசிவிட்டால், கிறிஸ்தவ மக்களின் கோபத்திற்கு ஆளாகி, அவர்களின் வாக்கு வங்கியை பெற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமா?

Reference & Picture courtesy : http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/1/5/2018/opposition-open-christian-council-fishery-settlement

Share