தமிழ் நாடு

மதம் மாற மறுத்த காதலியின் மீது கொலை வெறி தாக்குதல்! தமிழகத்தில் லவ் ஜிகாத்?

வேலூர் மாவட்டம் மெட்­டுக்­கு­ள பகுதியை சேர்ந்த மாணவி (வயது 22) . வேலூரை அடுத்த காட்­பாடி எம்.­ஜி.­ஆர் நக­ரில் வசிக்­கும் ஷபீர் (23) என்­ப­வ­ரும் ஒரே கல்­லூ­ரி­யில் படித்­துள்­ள­னர்.அப்­போது ஷபீர், அந்த இளம்­பெண்ணை காத­லிப்­ப­தா­க­வும், அவ­ரும் தன்னை காத­லிக்க வேண்­டும் என்று வற்புறுத்தி வந்­துள்­ளார். இதற்கு அந்த மாணவி சம்மதிக்கவில்லை. எனினும் விடாமல் துரத்தி உள்ளார் ஷபீர்.

காதலுக்கு எதிர்ப்பு தெரி­வித்­த­தால், அந்த பெண் கல்­லூரி படிப்பு முடிந்து வேலைக்கு செல்லும் போது அடிக்­கடி வழி­ ம­றித்து ஆபாச வார்த்­தை­க­ளால் ஷபீர் திட்­டு­வதை வழக்­க­மாக கொண்டிருந்தார். நேற்று முன்­தி­னம் இரவு வேலூர் கிரீன் சர்க்­கிள் அருகே நடந்து சென்ற அந்த பெண்ணை வழி­ம­றித்து, தன்னை திரு­மண செய்து கொள்ளும்­ப­டி­யும், மதம் ­மா­றச் சொல்­லி­யும் ஷபீர் மீண்­டும் கட்­டா­யப்­ப­டுத்­தி­யுள்­ளார். இதற்கு அந்த பெண் மறுத்ததாக தெரி­கி­றது. இத­னால், 2 பேருக்­கும் வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. இதில் ஆத்­தி­ர­ம­டைந்த ஷபீர், மறைத்து வைத்­தி­ருந்த கத்­தி­யால் இளம் ­பெண்­ணின் கழுத்தை அறுத்­து­விட்டு அங்­கி­ருந்து தப்பி ஓடி­விட்­டார்.

இளம்­ பெண்­ணின் அல­றல் சத்­தம் கேட்டு அரு­கில் இருந்­த­வர்­கள் ஓடி ­வந்து அவரை மீட்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்­த­னர். அங்கு அவ­ருக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வருகிறது. இது­கு­றித்து, இளம்­பெண் கொடுத்த புகா­ரின்­ பே­ரில், ஷபீரை வேலூர் வடக்கு போலீ­சார் கைது செய்து விசா­ரித்து வந்­த­னர்.

இதில் ஷபீர் போலீசாரிடம் கூறியதாவது : இரு­வ­ரும் வெவ்­வேறு மதத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்பதால் அவரை எங்­கள் மதத்­துக்கு மாறி­வி­டு­மாறு கூறி வந்­தேன். ஆனால், அவரும் அவருடைய பெற்றோரும் இதை ஏற்­றுக்­கொள்ள போவதில்லை என்று கூறி வந்தார். நேற்று முன்தினம் வேலூ­ரில் அந்த பெண்ணை பார்த்து, எனது கோரிக்­கையை வலி­யு­றுத்­தி­னேன். மீண்டும் அவர் மறுப்பு தெரி­வித்­த­தால், ஆத்­தி­ர­ம­டைந்த நான், மறைத்து வைத்­தி­ருந்த கத்­தி­யால் அவ­ரு­டைய கழுத்தை அறுத்­து­விட்டு தப்பி ஓடி­விட்­டேன்.

தமிழகத்தை அடுத்த கேரள மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்களை குறி வைத்து காதலிப்பதாக கூறி இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யும் நிகழ்வு நடந்து வருகிறது. கேரளத்தில் நடக்கும் லவ் ஜிகாத் கடந்த ஆண்டு தேசிய ஊடகம் ஒன்று நடத்திய ரகசிய செய்தி சேகரிப்பில் வெளியே வந்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது தமிழகத்தில் மதம் மாற மறுத்ததால் தான் காதலிப்பதாக கூறிய பெண்ணை ஷபீர் என்ற இஸ்லாமிய இளைஞன் கொலை செய்ய முயற்சி செய்திருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் லவ் ஜிகாத் தலை தூக்க ஆரம்பித்து விட்டதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

Pic Courtesy & Reference : http://www.dinamalarnellai.com/web/news/48345

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close