செய்தியை உடனுக்குடன் தருகின்றோம் என்கின்ற அடைமொழியுடன் இன்று செய்தி வெளியிடும் ஊடகங்கள், தங்கள் வியாபார நோக்கை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செய்திகளை திரித்து வெளியிடுகின்றன. சமீபகாலங்களில் இது மிகவும் சாதாரண நிகழ்வாக மாறி வருகிறது.

மக்களின் கவனத்தை கவர்வதற்காகவும், புகழின் வெளிச்சத்தில் இருப்பவர்களை சர்ச்சையில் ஆழ்த்தவும், தங்களுக்கான பார்வையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் செய்யப்படும் இது போன்ற மலிவான வியாபார யுத்திகள்  கண்டிக்கத்தக்கது.

சமீபத்தில் தன்னுடைய  காரில் புறப்பட்ட ரஜினிகாந்த் அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது, நிருபர் கேட்ட கேள்விக்கு “தமிழகத்தில் தான் முதன் முதலில் அமைப்பு முறை(system) சீர்படுத்தப் பட வேண்டும்” என்று கூறுகிறார். இது இவர் முதலில் தமிழ் நாட்டை பற்றி சிந்திக்கின்றார்(மாநில அரசியல்) பிறகு தேசிய அரசியல் பக்கம் செல்வோம் என்ற செயல் திட்டமாக இருக்கலாம் என்பது அனைவரும் யூகிக்கக் கூடிய ஒன்று.

ஆனால் இது குறித்து செய்தி வெளியிட்ட புதிய தலைமுறை “தமிழகத்தில் தான் சிஸ்டம் சரியில்லை” என்ற வார்த்தைகளை முதன்மைப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது. இது ஊடக தர்மத்தை மீறும் செயல். இது போன்று திரித்து செய்தி வெளியிடும் போக்கு மிகுந்த கண்டனத்திற்கு உரியது. இங்கு அமைப்பு முறை சரியில்லை என்கின்ற வார்த்தையை அவர் பிரயோகிக்கவே இல்லை. ஊடகங்கள் உண்மை செய்திகளை மட்டும் அளிக்க முன்வருமா?

Share