சமீபகாலமாக அதிகரித்து வரும் கற்பழிப்புகள் குறித்து மக்கள் கொதித்துப் போய் உள்ள நிலையில், கற்பழிப்பு என்பது மனித குற்றமாக பார்க்கப்படுகிறதே தவிர மதத்தை தொடர்பு படுத்தி என்றுமே பார்க்கப்படுவதில்லை.

ஆனால் 13-ஏப்ரல் காலை 7:58 மணிக்கு டைம்ஸ் நவ் ஊடகத்தின் ஷபீர் அஹெமத் தனது டுவிட்டர் பக்கத்தில் சமீபத்திய கற்பழிப்பு சம்பவங்களுக்கு ஹிந்து கடவுள் ராமர் தான் காரணம் என்பது போன்ற சித்திரத்தை பகிர்ந்து இருக்கின்றார்.

கிறுத்தவர்கள் ஈடுபடும் கற்பழிப்புகளுக்கு ஏசு காரணம் என்றால் எவ்வளவு முட்டாள்த்தனமானதோ, இஸ்லாமியர்கள் ஈடுபடும் கற்பழிப்புகளுக்கு முகமது நபி காரணம் என்றால் எவ்வளவு முட்டாள்த்தனமானதோ, அதேபோன்று இங்கு ராமரை வம்பிழுத்திருப்பது அடி முட்டாள்த்தனமானது.

கடுமையான கண்டனங்கள் அனைத்து தரப்பில் இருந்தும் வரவே தனது டுவிட்டர் கணக்கை protected-ஆக மாற்றியுள்ளார் ஷபிர். மத துவேஷத்தில் ஈடுபட்ட ஷபீருக்கு டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஷபீர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதினால் ஹிந்து கடவுள்களை ஊடகவியலாளர் என்ற போர்வையில் துவேஷத்துடன் எதிர்த்து வருகின்றாரா என்கின்ற கேள்வி நம் மனதில் எழாமல் இல்லை.

இந்த மத துவேஷ டுவிட்டை புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முதன்மை நிருபர் ஸ்டாலின் என்பவர் மறுக்கீச்சு செய்துள்ளார். இவரும் மாற்று மதத்தை சேர்ந்தவரா? அதனால் ஹிந்து மத எதிர்ப்பை ஊக்குவிக்கின்றாரா? இந்த துவேஷத்தை சக-ஊடகவியலாளர்கள் கண்டித்தனரா என்றால் அதுவும் இல்லை.

இதற்கிடையே ஷபீர் மீது பல்வேறு இடங்களில் காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

ஊடகவியலாளர்கள் நடுநிலையுடன் செயல்ப்பட்டனர் என்ற காலம் மலையேறிவிட்டதாகவே தோன்றுகிறது.

 

Share