அரசியல்செய்திகள்

போலி தகவல்களை இணையத்தில் பரப்பும் தி.மு.க பிரமுகர்

அடுத்த 5 ஆண்டுகளில்(2018-2022) வளர்ச்சிமிகு இந்தியாவை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கோடு ஒத்திசையும் வகையில் மத்திய அரசு இந்தியாவில் 115 பின்தங்கிய மாவட்டங்களை 2022-ம் ஆண்டிற்குள் துரிதமாக மேம்படுத்திட தேர்வு செய்துள்ளது. நாட்டின் பின் தங்கிய மாவட்டங்களின் மேம்பாடு மிகவும் அவசியமான ஒன்று என்று உணர்ந்துள்ள மத்திய மோடி அரசு மத்திய திட்டக்குழு நிதி ஆயோக் மூலமாக வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கவும் அதை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளது.

ஓரளவு தொழில் ஆதாரங்கள் இருந்தும், சிறப்பான தொழிலாளர்கள் இருந்தும் கால மாறுதலுக்கு ஏற்ப இந்த மாவட்டங்கள் மட்டும் பெரிய வளர்ச்சி பெறாமல் மிகவும் பின் தங்கியிருப்பதாக அறியப்பட்டுள்ள இந்த மாவட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி பல வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அனைத்து வசதியுமுள்ள மாவட்டமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழ் நாட்டில் விருதுநகர் மாவட்டமும் இராமநாதபுரம் மாவட்டமும் தேர்வி செய்யப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டத்தை வளர்ச்சி மாவட்டமாக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனவரி-31-ஆம் தேதி விருதுநகர் வந்தார். இந்த கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம், மத்திய கண்காணிப்பு அலுவலர் பிரவீன் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

மத்திய அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த நல்ல திட்டத்தால் தமிழகத்தில் 2 மாவட்டங்கள் பயன்பெற போகிறது என்பதையும் கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசாங்கத்தையும் பிரதமர் மோடியையும் சதாசர்வகாலமும் கண்மூடித்தனமாக விமர்சிப்பதையே வேலையாக கொண்டிருக்கும் தி.மு.க பிரமுகர் திரு.SKP கருணா, இந்த திட்டத்தை பற்றி ஒன்றுமே தெரியாமல் குறுட்டான்போக்க்கில் விமர்சித்திருப்பது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

SKP கருணா பதிவிட்ட டுவிட் “கவர்னர் ஆய்வு போதலை போலிருக்கு! ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்கிறாராமே! முதலமைச்சர் & துணை முதலமைச்சர் கறிவிருந்துக்கு செல்லும் மாநிலத்தில் இதுதான் நடக்கும். கேட்டால் ‘முந்தைய திமுக ஆட்சியிலேன்னு’ ஆரம்பிப்பாங்க.”

இனியேனும் தி.மு.க பிரமுகர் திரு.SKP கருணா தவறான தகவல்களை மக்களிடம் பரப்பாமல் பொறுப்புணர்வோடு நடந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Transforming Aspirational Districts திட்டம் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள – http://niti.gov.in/content/about-aspirational-districts-programme#

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close